Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நான் விரும்பும் தலைவர் விஜய்".. வைரலாகும் குட்டி ரசிகனின் பதில்

5-ம் வகுப்பு மாணவனின் தேர்வு பதில் வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நான் விரும்பும் தலைவர் என்ற கேள்விக்கு மாணவன் அளித்த பதில்

    சென்னை: நடிகர் விஜய்-க்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் ரசிகர் கூட்டம் பெருகி கிடக்கிறது. அதிலும் குழந்தைகளை கவர்ந்த நடிகர்களில் முதலாவதாகவே விஜய் இருப்பார் போலும்!

    விஜய் என்ன செய்தாலும் அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று விடுகிறது. இதை தவிர விஜய் ரசிகர்கள் செய்யும் காரியங்கள் பல்வேறு தரப்பினாரால் பாராட்டை பெற்று வருகிறது.

    கேரளாவில் உதவி

    கேரளாவில் உதவி

    கேரளாவிலும் விஜய்க்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ள நிலையில், சமீபத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு விஜய் அளித்த நிதியுதவி ஆகட்டும், விஜய் ரசிகர்கள் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்த உதவியாகட்டும் இணையத்தில் அதிகமாகவும் பெருமையாகவும் பேசப்பட்டது.

    நீ விரும்பும் தலைவர்

    நீ விரும்பும் தலைவர்

    இந்நிலையில், 5-ம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு பரீட்சையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, ""நீ விரும்பும் தலைவர்களுள் ஒருவர் பற்றி கட்டுரை வரைக" இதுதான் தலைப்பு. இந்த தலைப்பு கிட்டத்தட்ட 40, 50 வருடங்களாகவே கல்வித்துறையில் வலம் வரும்போலும். அப்போதெல்லாம் இந்த கேள்விக்கு நான் விரும்பும் தலைவர் மகாத்மா காந்தி, நேரு, பகத்சிங் என்று மாணவர்கள் பதில் எழுதுவார்கள்.

    நான் விரும்பும் தலைவர்

    நான் விரும்பும் தலைவர்

    ஆனால் இதே கேள்வி இப்போது 5-ம் வகுப்பிலும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு 5-ம் வகுப்பு மாணவன் ஒருவன்," நான் விரும்பும் தலைவர் விஜய். அவர் அழகாக இருப்பார்" என எழுதி இருக்கிறார். இந்த விடைத்தாள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

    குட்டி விஜய் ரசிகன்

    குட்டி விஜய் ரசிகன்

    விஜய் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. ஆனாலும் அதற்குள் தலைவராகி விட்டார்!! மாணவனின் இந்த பதிலால் விஜய் ரசிகர்கள் தரப்பினர் மிகுந்த சந்தோஷத்துக்கு உள்ளாகி இருக்கிறார்களாம். அது சரி.. விஜய்யின் குட்டி ரசிகனின் அந்த பதிலுக்கு பரீட்சையில் மார்க் கிடைத்திருக்குமா??

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+