சென்னை மக்களின் நிலையைக் கண்டு எனது இதயத்தில் ரத்தம் வழிகின்றது- நடிகர் விவேக்
சென்னை: சென்னையில் வசிக்கும் என் சக மக்களின் நிலையைக் கண்டு என்னுடைய இதயத்தில் இருந்து ரத்தம் வழிகிறது என்று நடிகர் விவேக் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் புறநகரில் வசிக்கும் மக்களின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது.
I m stuck at hydbd.My heart bleeds for my fellow citizens.I m deeply moved by the humane in humans at this time pic.twitter.com/jVSOD8JYjc
— Vivekh actor (@Actor_Vivek) December 2, 2015 வீடு, வாசல்களில் வெள்ளம் புகுந்தது மட்டுமன்றி மின்சாரமும் தடைப்பட்ட நிலையில் சென்னை மக்கள் உயிரைத் தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டு பரிதவித்து நிற்கின்றனர்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சக மனிதர்களும், தொண்டு நிறுவனங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விவேக் "நான் ஹைதராபாத்தில் சிக்கிக் கொண்டேன். என் சக குடிமக்களின் நிலையைக் கண்டு எனது இதயத்தில் இருந்து ரத்தம் வழிகின்றது.
ஆனாலும் இந்த மாதிரி சூழ்நிலையில் மனிதர்கள் தங்கள் சக மனிதர்களிடம் காட்டும் மனிதாபிமானத்தைக் கண்டு நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் திருவிக நகர், அம்பத்தூர், திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட், ராயபுரம், அண்ணா நகர் மற்றும் மாதவரம் போன்ற இடங்களுக்கான உதவி பெறும் தொலைபேசி எண்களையும் பதிவிட்டிருக்கிறார்.
நடிகர் விவேக்கின் இந்த பதிவிற்கு நிறைய பேர் நீங்கள் பத்திரமாக இருங்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications