ஐஎஸ் இயக்கத்துக்கும் என் கணவருக்கும் தொடர்பில்லை... அவர் அப்பாவி...மொசுருதீன் மனைவி
திருப்பூர் : ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் என்றால் என்னவென்றே தங்களுக்குத் தெரியாது என்றும் தன் கணவர் அப்பாவி என்றும்
மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதி முகமது மொசுருதீன் மனைவி கூறியுள்ளார். திருப்பூரில் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் ஊடுருவி இருப்பதாக தகவல் அம்பலமாகியுள்ளதால் தொழில்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் புர்துவான் ரயில் நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய முகமது மொசுருதீன்,28 என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு உளவுத்துறை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம், பிர்பாம் மாவட்டத்தை சேர்ந்த லாப்பூர் கிராமத்தை சேர்ந்த முகமது மொசுருதீன், கடந்த 6 ஆண்டுகளாக திருப்பூர் மங்கலம் ரோடு ஆண்டிப்பாளையம் கோழிப்பண்ணை பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து மளிகை கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மேற்கு வங்க மாநில உளவுத்துறை போலீஸார் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி கோவை புலனாய்வு பிரிவு போலீசார், திருப்பூர் மத்திய போலீசார் உதவியுடன் திருப்பூர் கோழிப்பண்ணையில் உள்ள முகமது மொசுருதீனின் மளிகை கடை மற்றும் அவரது வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்து லேப்-டேப், கத்தி மற்றும் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். வீட்டில் இருந்த முகமது மொசுருதீனின் மனைவி சாயிரா பானு,25, முகமது மொசுருதீனின் தம்பி அசுதுல்லா,23, நண்பர் ஷாநவாஸ்,20 ஆகியோரிடம் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புலனாய்வு பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
அப்போது, முகமது மொசுருதீன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடனான தொடர்பு குறித்து சாயிராவிடம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது என்று சாயிரா கூறியதோடு, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தோடு கணவர் வைத்திருந்த தொடர்பு குறித்தும் எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
தனது கணவர் அப்பாவி என்றும் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வாங்குவதற்காகவே மேற்கு வங்காளத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார். பாதுகாப்புக்காக மட்டுமே கத்தி வைத்திருந்ததாகவும், வங்கி பண பரிவர்த்தனைக்காகவே லேப்டாப் வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
திருப்பூரை அடுத்த மங்கலத்தில் தங்கியிருந்த முகமது மொசுருதீனின் அண்ணன் முகமது லினாசுருதீனிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். தேவைப்படும் போது விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று முகமது மொசுருதீனின் குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திருப்பூர் வந்துள்ள மேற்கு வங்க மாநில உளவுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுஸ் தலைமையிலான போலீசார், முகமது மொசுருதீன் நடத்தி வந்த மளிகை கடை மற்றும் அவர் குடியிருந்த வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தியதுடன் கைப்பற்றப்பட்ட லேப்-டாப்பையும், அவரது செல்போனையும் கண்காணித்தபோது, ஃபேஸ்புக் மூலமாக ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளது தெரியவந்ததோடு, செல்போனில் இருந்து சிரியாவுக்கும், மேற்கு வங்கத்தில் உள்ளவர்களுடனும் அடிக்கடி பேசி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், முகமது மொசுருதீன் திருப்பூரில் வசித்தபோது ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்தாரா, அவர் யார், யாருடன் அதிகமாக தொடர்பு வைத்திருந்தார் உள்ளிட்ட விவரங்களை உளவுத்துறை போலீஸார் சேகரித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி உள்ளனர்.
முகமது மொசுருதீன் வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோரை திருப்பூர் மற்றும் திருப்பூரை சுற்றி இருக்கக்கூடிய பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் திருப்பூரை சேர்ந்த தொழில்துறையினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தொழில் நகரமான திருப்பூரை தகர்க்கும் நோக்குடன் இப்படி செய்யப்பட்டார்களா என்ற அச்சமும் மேலோங்கி இருக்கிறது. இத்தகைய தொழிலாளர்கள் எந்த தொழில் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்களை களையெடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications