Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதனால்தான் நான் நாசமாய் போனேன்.. என் வாழ்க்கையே பாழாகிவிட்டது.. சக கைதிகளிடம் புலம்பிய அபிராமி!

மியூசிக்கலியால்தான் தன் வாழ்க்கையே நாசமாகிவிட்டதாக சக கைதிகளிடம் அபிராமி புலம்பி வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சக கைதிகளிடம் புலம்பிய அபிராமி!- வீடியோ

    சென்னை: மியூசிக்கலியால்தான் தன் வாழ்க்கையே நாசமாகிவிட்டதாக சக கைதிகளிடம் அபிராமி புலம்பி வருகிறார்.

    குன்றத்தூரில் உள்ள பிரியாணிக் கடை ஊழியருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கடந்த 2 மாதங்களாக வாழ்க்கையை ரசித்து ருசித்து வாழ்ந்துள்ளார் அபிராமி. இந்நிலையில் குழந்தைகள் மற்றும் கணவரை உதறிதள்ளிவிட்டு சுந்தரத்தின் வீட்டிலேயே கிடந்த அபிராமியை அவரது தந்தை அடித்து உதைத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

    ஈவு இரக்கமின்றி கொலை

    ஈவு இரக்கமின்றி கொலை

    இதனால் தனது மகிழ்ச்சி பறிபோனதாக எண்ணிய அபிராமி கள்ளக்காதலனுடன் வாழ இடையூறாய் இருந்ததாக குழந்தைகளை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொலை செய்தார் குன்றத்தூரை சேர்ந்த அபிராமி.

    அபிராமியின் வெறியாட்டம்

    அபிராமியின் வெறியாட்டம்

    கணவரையும் கொல்ல கள்ளக்காதலனுடன் அவர் தீட்டிய சதித்திட்டம் தோல்வியடைந்தது. பணி நிமித்தமாக கணவர் இரவு அலுவலகத்திலேயே தங்கியதால் மனைவியின் கொலை வெறியாட்டத்தில் இருந்து தப்பினார் கணவர் விஜய்.

    பாலில் கலக்கப்பட்ட மாத்திரைகள்

    பாலில் கலக்கப்பட்ட மாத்திரைகள்

    30 ஆம் தேதி முதலே குழந்தைகளை கொலை செய்யும் படலத்தை தொடங்கினார் அபிராமி. 30 ஆம் தேதி இரவு கணவர், மகள், மகனுக்கு கொடுத்த பாலில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார்.

    மகன் கொடூர கொலை

    மகன் கொடூர கொலை

    இதில் 4 வயது மகள் இறக்கவே, மறுநாள் காலையில் கணவர் வேலைக்கு சென்ற பிறகு 8 வயது மகனை வாய் மற்றும் மூக்கை பொத்தி மூச்சை திணறடித்து துடிக்க துடிக்க கொலை செய்தார் அபிராமி.

    விடிய விடிய உல்லாசம்

    விடிய விடிய உல்லாசம்

    குழந்தைகளை கொன்ற கையோடு கொஞ்சமும் வருத்தமில்லாமல் இரவோடு இரவாக சுந்தரத்தை சந்தித்த அபிராமி அவருடன் ஊருக்கு ஒதுக்குபுறமாக விடிய விடிய உல்லாசம் அனுபவித்துள்ளார்.

    சிக்கிய அபிராமி

    சிக்கிய அபிராமி

    விடியற்காலையில் சுந்தரத்தின் ஆலோசனைப்படி நாகர்கோவில் சென்ற அவரை, கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்து கையும் களவுமாக பிடித்தனர் போலீசார்.

    புழல் சிறையில்

    புழல் சிறையில்

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்தார் அபிராமி. 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சகக் கைதிகளிடம்

    சகக் கைதிகளிடம்

    சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து யாரிடமும் பேசாமல், சாப்பிடாமல் இருந்த அபிராமி மெல்ல மெல்ல சிறையில் இருக்கும் சகக் கைதிகளிடம் பேச தொடங்கியுள்ளார்.

    வாழ்க்கை பாழாய் போனது

    வாழ்க்கை பாழாய் போனது

    அப்போது இந்த பாழாய் போன மியூசிக்கலியால்தான் நான் நாசமானேன். எனது வாழ்க்கை நாசமாய் போனதும் இதனால்தான், நானும் சுந்தரமும் சேர்ந்தது மியூசிக்கலில் தான் என்று கூறி கதறியுள்ளார் அபிராமி.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+