சுப்பிரமணிய சாமிக்கு என் மகனே அழகாக பதில் சொல்லியுள்ளார்.. துரை தயாவை மெச்சிய அழகிரி!
சுப்பிரமணிய சாமி ஒரு மன நோயாளி என துரை தயாவை போல அவரது தந்தையான அழகிரியும் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை: சுப்பிரமணிய சாமி ஒரு மன நோயாளி என துரை தயாவை போல அவரது தந்தையான அழகிரியும் தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் தனது வெயிட்டை காட்ட பேரணி நடத்தவுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான அழகிரி. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பேரணி குறித்து ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் அழகிரி. இன்று இரண்டாவது நாளாக மதுரையில் ஆலோசனை நடத்தினார் அழகிரி.

அழகாக பதில் சொல்லியுள்ளார்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரியிடம், சுப்பிரமணி சாமியின் இட்லி கடை கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அழகிரி, சுப்பிரமணிய சாமிக்கு என் மகனே அழகாக பதில் சொல்லியுள்ளார். சுப்பிரமணிய சுவாமி ஒரு மனநோயாளி அவர் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. அதையே தான் நான் கூறுகிறேன் என்றார்.

துரை தயாநிதி பதில்
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆளூர் ஷா நவாஸ் சுப்பிரமணிய சாமி குறித்து கேட்ட கேள்விக்கு மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை , அதுவே காரணம் என கோபமாக பதிலளித்திருந்தார் துரை தயாநிதி என்பது நினைவு கூறத்தக்கது.

விரும்பவில்லை
மேலும் திமுக குறித்த கேள்விக்கு பதிலளித்த அழகிரி, திமுகவில் நான் தற்போது இல்லை. ஆதாலால் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

அமைச்சரிடமே கேட்டு சொல்லுங்கள்
அமைச்சர் ஆர்பி உதயக்குமார் திருமங்கலம் பார்முலா என கூறியது தொடர்பான கேள்விக்கு, திருமங்கலம் பார்மலா என்றால் என்ன என்று வருவாய் துறை அமைச்சரிடமே கேட்டு சொல்லுங்கள் என்றார்.

ஒப்பந்த உறவுகள்
திமுக அதிமுக உறவு என்று தினகரன் சொல்லியுள்ளது ஒப்பந்த உறவுகள் ஆகும் என்றும் அழகிரி கூறினார். அழகிரியின் ஒவ்வொரு கருத்தும் தமிழக அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ்












Click it and Unblock the Notifications