மும்பை போய்ட்டு வர்றதுக்குள்ள தமிழ்நாடு மாபியா கும்பலிடம் சிக்கிருச்சே.. குஷ்பு

மும்பை போயிட்டு திரும்புறதுக்குள்ள தமிழ்நாடு மாபியா கும்பல் கையில சிக்கியிருக்கே என்று நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகையும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான நடிகை குஷ்பு, தமிழக அரசு மாபியா கும்பல் கையில் சிக்கியிருப்பதாக கூறியுள்ளார். இதனை நினைத்து தன்னால் சந்தோசப்பட முடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வராக சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

My state in hands of a mafia gang says Khushboo

சட்டசபை நிகழ்வுகளைப் பற்றி பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் சமூக வலைத்தளங்களில் பலரும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதி அரசு பற்றி தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

மாபியா கேங்

நான் இப்போதான் சென்னை திரும்பியிருக்கேன். நான் ஊருக்கு போயிட்டு வர்றதுக்குள்ள என் மாநிலம் மாஃபியா கேங் கையில சிக்கியிருக்கே என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.

என்னால சந்தோசப்பட முடியலை... குஷ்பு

இன்று காலையில் என்னால் சந்தோசமாக எமோஜி போட முடியவில்லை. என் மாநிலமே கவலையாக இருக்கிறது. எனக்கு இது சந்தோசமாக காலையில்லை என்றும் பதிவிட்டுள்ளார் குஷ்பு.

புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளதால் தமிழக மக்களே சோகத்தில்தான் இருக்கின்றனர் என்பது போல குஷ்பு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+