விஜயபாஸ்கர் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் மரணத்திலும் மர்மம்- திடீரென இறந்தது எப்படி?
அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியத்திலும் மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
நாமக்கல்: அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர் சுப்பிரமணியத்தின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதில் குழப்பமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமானவர் அரசு ஒப்பந்ததாரரான நாமக்கல் சுப்பிரமணியம். தமிழக அரசு மருத்துவமனை கட்டுமான ஒப்பந்தங்களை பெற்றவர் சுப்பிரமணியம்.

ஐடி ரெய்டு
விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தபோது நாமக்கல்லில் சுப்பிரமணியத்தின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின.

திடீர் மரணம்
இந்த நிலையில் இன்று தமது பண்ணை வீட்டில் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அவரது குடும்பத்தினர் தற்போது மறுத்துள்ளனர்.

மாரடைப்பா?
சுப்பிரமணியத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டுதான் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பர் அண்ணா நகர், முன்னாள் அமைச்சர் ராஜாவின் நண்பர் சாதிக்பாட்சா ஆகியோரது மரணங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.

தொடரும் மர்மங்கள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திலும் மர்மம் தொடருகிறது. அவரது கொடநாடு பங்களா கொலை, கொள்ளை தொடர்பான சம்பவங்களில் தொடர்புடையோர் மரணங்களிலும் மர்மம் நீடிக்கிறது. இந்த நிலையில் விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியத்திலும் மர்மம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications