விடைபெற்றார் முத்துக்குமார்.. ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலியுடன் உடல் தகனம்
சென்னை: மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று மாலை நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் உடல் தகனம் நடைபெற்றது.
மஞ்சள் காமாலை மற்றும் மாரடைப்பு காரணமாக பாடலாசிரியர் நா. முத்துக்குமார் இன்று காலை அகால மரணமடைந்தார். 41 வயதில் சாவைச் சந்தித்துள்ள முத்துக்குமாரின் மரணத்தால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முத்துக்குமாரின் உடல் தற்போது அவரது அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர், பல்துறைப் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இயக்குநர்கள் சீமான், சேரன், வெற்றி மாறன், எஸ்.பி. ஜனநாதன், விக்கிரமன், ஆர்.கே.செல்வமணி, ராஜு முருகன், கவிஞர் சினேகன், நடிகர்கள் விஜய், விவேக், உதயநிதி ஸ்டாலின், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது. திரையுலகினர், பொதுமக்கள் பெரும் திரளாக இறுதி ஊர்வலத்திலும், இறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டனர்.
முன்னதாக அவரது உடலை சொந்த ஊரான காஞ்சிபுரம் அருகே உள்ள கன்னிகாபுரத்தில் தகனம் செய்ய வேண்டும் என்று அவரது பாட்டி கிருஷ்ணவேணி வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் தற்போது உடல் தகனம் சென்னையிலேயே நடைபெறும் என அவரது குடும்பத்தினர் முடிவு செய்ததால் சென்னையிலேயே அவரது உடல் தகனம் நடைபெற்றது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications