ஜெயலலிதாவின் சாதனை நடிகர் சங்க சரித்திரத்தில் இடம்பெறும்!- சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளது நடிகர் சங்க சரித்திரத்தில் இடம்பெறும் சாதனையாகும் என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார். இதனை திரையுலகம் வரவேற்று நன்றி கூறி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

Nadigar Sangam praised Jayalalithaa

மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் சங்க சரித்திரத்தில் உங்களது செயல் சாதனையாக என்றும் போற்றப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+