காற்றில் பெயர்ந்து விழுந்த ரயில் நிலைய மேற்கூரை - பயணிகள் ஓட்டம்
ரயில் நிலைய முன் பதிவு அறையின் மேற் கூரை திடீரென காற்றில் பெயர்ந்து விழுந்ததால் முன்பதிவுக்கு நின்றிருந்த பயணிகள் அச்சத்துடன் ஓடினர்.
நாகர்கோவில்: ரயில் நிலைய முன் பதிவு அறையின் மேற் கூரை திடீரென காற்றில் பெயர்ந்து விழுந்ததால் முன்பதிவுக்கு நின்றிருந்த பயணிகள் ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து பல முக்கிய நகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள முன் பதிவு மையத்தில் 6 கவுண்டர்கள் செயல்படுகின்றன. காலை 8 மணிக்கு முன் பதிவு தொடங்கி, மதியம் 2 மணி வரையிலும், பின்னர் மதியம் 2.15க்கு தொடங்கி இரவு 8 மணி வரையிலும் முன் பதிவு நடக்கிறது.

தினமும் ஏராளமான பயணிகள் முன்பதிவு மையத்துக்கு வந்து செல்கிறார்கள். இந்நிலையில் மாலை 6 மணியளவிலும் முன் பதிவுக்காக பயணிகள் கவுண்டர்கள் முன் காத்திருந்தனர். சிலர் அங்கு போடப்பட்டு இருந்த இரும்பு நாற்காலிகளில் அமர்ந்து இருந்தனர். அப்போது திடீரென முன் பதிவு மைய கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
பெயர்ந்து விழுந்த இடிபாடுகள் அங்கு போடப்பட்டு இருந்த இரும்பு நாற்காலிகளில் பயங்கர சத்தத்துடன் விழுந்து சிதறின. இதனால் முன் பதிவுக்காக வந்து இருந்த பயணிகள் அலறி அடித்தவாறு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
கீழ் தளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் ஏதோ வெடிகுண்டு வெடித்து விட்டதா? என நினைத்து அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு டிக்கெட் முன் பதிவு மையத்தில் இருந்தவர்கள் அலறி அடித்தவாறு கீழே ஓடி வந்தனர். அதன் பின்னரே கட்டிடம் பெயர்ந்து விழுந்தது தெரிய வந்தது.
இது பற்றி அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் விரைந்து வந்தனர்.
கட்டிடம் இடிந்து விழுந்த சமயத்தில் அந்த பகுதியில் ஹெல்மெட் அணிந்தவாறு பயணி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவர் தலையில் கற்கள் பெயர்ந்து விழுந்தன. ஹெல்மெட் இருந்ததால் அவர் காயமின்றி தப்பினார். மற்றவர்களுக்கும் காயம் எதுவும் ஏற்பட வில்லை. அதிர்ஷ்டவசமாக வேறு எந்த வித அசம்பாவிதமும் நிகழ வில்லை என பயணிகள் தெரிவித்தனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications