ரஜினியைத் தொடர்ந்து கமலையும் சந்தித்து வணக்கம் வைத்த நக்மா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தைத் தொடர்ந்து கமல்ஹாசனை நடிகை நக்மா சென்னையில் இன்று சந்தித்தார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்த கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான நக்மா இன்று அவரை சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக கூறியதையடுத்து அமைச்சர்கள் விமர்சித்ததில் தொடங்கியது கமலின் அரசியல் பயணம். தான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டதாக அதிரடி கிளப்பினார் நடிகர் கமல்ஹாசன்.

கமல் அரசியல்
நீட் தேர்வுக்குத் தடை, டெங்குவை ஒழிக்க நடவடிக்கை என தொடர்ந்து மக்கள் பிரச்னைகளுக்கு எதிராக கமல் டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். தொடர்ந்து விடாமல் பிரச்சினைகளை அலசி வருகிறார்.

பாரபட்சமின்றி
மாணவி அனிதா தற்கொலை விவகாரத்திலும் பாரபட்சமின்றி மத்திய, மாநில அரசுகளை விமர்சித்திருந்தார். மேலும் தான் அரசியலுக்கு என்றோ வந்தவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார் கமல்ஹாசன்.

நக்மா திடீர் சந்திப்பு
இந்நிலையில் நடிகையும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளருமான நக்மா ஆழ்வார் பேட்டையில் உள்ள வீட்டில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அநேகமாக அவரை காங்கிரஸ் கட்சியின் பக்கம் இழுப்பதற்காகவே இந்த சந்திப்பு நடந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ரஜினியைத் தொடர்ந்து
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக எழுந்த பரபரப்பான சமயத்தின் போது நக்மா ரஜினிகாந்த்தை சந்தித்தார். ஆனால் சந்திப்பு குறித்து வெளிப்படையான தகவல் எதையும் சொல்லாவிட்டாலும், ரஜினியை காங்கிரஸ் பக்கம் இழுப்பதற்கான முயற்சி என்று கூறப்பட்டது.
இப்போது பிக் பாஸை சந்தித்துள்ளார்...இது எதற்கோ!
-
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications