"துண்டு" சேருதே.. நயினார் நாகேந்திரன் வீசிய "குண்டு".. என்னாது, திமுகவா? கடுப்பான எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழக சட்டமன்ற பாஜக தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் கூறியுள்ள ஒரு கருத்து, எடப்பாடி பழனிசாமி கூடாரத்தை செம டென்ஷனாக்கி வருகிறது.. என்ன காரணம்?
நயினாரை பொறுத்தவரை, அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர்.. எடுத்த எடுப்பிலேயே துணைத்தலைவர் பதவியை தந்தது பாஜக.. எம்பி தேர்தலிலும் சீட் கொடுத்தது.
மூத்த முக்கிய தலைவர்:
ஆனால் நயினாருக்கோ, மாநில தலைமை பதவி காலியாக இருந்தபோது, அதன் மீது ஒரு கண் இருந்ததாகவும், குறிப்பாக, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டியே இருந்ததாகவும் அப்போது சலசலக்கப்பட்டது.

எனினும், இப்போதுவரை தன்னுடைய தொகுதியின் வளர்ச்சி திட்டத்துக்காக பல்வேறு அறிவிப்புகளை செய்து கொண்டிருக்கிறார்.. அதேசமயம், மாநில தலைமை குறித்த சர்ச்சைகள், விவகாரங்கள் கிளம்பும்போதெல்லாம், அதுகுறித்து எந்த கருத்தையும் வெளியிடாமல் தவிர்த்தும் வருகிறார்..
சான்ஸ் கிடைக்குமா?:
இப்போது விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்ற ஆசை, நயினாருக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.. 6 மாதத்துக்கு முன்புகூட செய்தியாளர்களுக்கு நயினார் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் உள்ளது. கட்சி தலைமை முடிவு செய்தால் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நின்று தேர்தலை சந்திப்பேன்" என்று ஓபனாகவே கூறியிருந்தார்.
அதுமட்டுமல்ல, ஒருங்கிணைந்த அதிமுக என்பதிலும் உறுதியாகவே உள்ளார் நயினார் நாகேந்திரன்.. அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் அங்கிருந்து வெளியேறி பாஜகவுக்கு வந்தாலும்கூட, அனைத்து அதிமுகவின் சீனியர்களிடமும் நயினாருக்கு தனிப்பட்ட அன்பும், மரியாதையும் இருந்து வருகிறது.. அதனால்தானோ என்னவோ, ஓபிஎஸ் விவகாரம் தலைதூக்கும்போதெல்லாம், அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுகவுக்கு பலம் என்பதை தவறாமல் வலியுறுத்தி வருகிறார்.

கன்னியாகுமரி:
இதோ இன்றுகூட கன்னியாகுமரியில் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "வரும் எம்பி தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்கள்... மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட அனைவருடனும் சேர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறுவதற்காக தேர்தல் பணியாற்றுவோம். கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவினால் எம்பி தேர்தலில் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
பாராளுமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு முறையான வாக்குப்பதிவு நடைபெறும். பாராளுமன்றத்தை பொறுத்தமட்டில் யார் இந்த நாட்டினுடைய பிரதமராக வரவேண்டும் என்பதை பொறுத்து தான் வாக்கு வங்கி அமையும். வருகிற பாராளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் திமுகவை எதிர்க்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் சேர வேண்டும். அப்படி ஒன்றுபட்டு தேர்தல் களத்தை சந்தித்தால் தான் திமுகவை தோற்கடிக்க முடியும்.

எடப்பாடி பழனிசாமி டீம்:
அதனால், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய அனைவரும் தனித்தனி அணியாக பிரிந்து நிற்காமல் ஒன்று சேர்ந்து திமுகவை எதிர்க்க வேண்டும். திமுகவை எதிர்க்கக் கூடிய அனைத்து கட்சிகளும் ஒரேஅணியில் இணைய வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.. திருமாவளவன் அதிமுக கூட்டணியில் சேருவாரா? என்பது பற்றி அவர்தான் கருத்து சொல்ல வேண்டும்.
ஆனால், வருகிற பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி தான் மறுபடியும் பிரதமர் ஆவார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உலகத்தில் இருக்கிற மிகச்சிறந்த தலைவர் யார் என்று சொன்னால் இன்றைக்கு முதல் வரிசையில் இடம் பிடித்து இருப்பவர் பிரதமர் மோடி மட்டும் தான். அதனால், இந்தியாவில் 3-வது முறையாக மோடி பிரதமராக பொறுப்பு ஏற்பது உறுதி" என்று கூறியிருக்கிறார் நயினார் நாகேந்திரன்.
சாத்தியமா?:
ஒருங்கிணைந்த அதிமுகவை மீண்டும் நயினார் வலியுறுத்தியிருப்பது, எடப்பாடி பழனிசாமி கூடாரத்தை கடுப்பாக்கி விட்டுள்ளது.. அதேசமயம், இந்த தேர்தலில், தனக்கு சீட் வேண்டும் என்பதை மறுபடியும் ஒருமுறை வாய்விட்டு கேட்டுள்ளார் நயினார் நாகேந்திரன்.. பாஜக என்னதான் செய்ய போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications