அண்ணாமலையை 'விஞ்சை விலாஸ்' க்கு அழைத்துச் சென்ற நயினார்! அப்படியென்னங்க பெரிய ஹோட்டல் அது?
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பாதயாத்திரை நடத்தி வரும் அண்ணாமலை, அங்குள்ள நூற்றாண்டு பாரம்பரியமிக்க சிறிய உணவகத்தில் காலை சிற்றூண்டி சாப்பிட்டது குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
என் மண் என் மக்கள் என்ற முழக்கத்துடன் பாதயாத்திரை நடத்தி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை இதுவரை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, என 6 மாவட்டங்களை நிறைவு செய்து 7வது மாவட்டமாக நெல்லை மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

அண்ணாமலை சொகுசு நட்சத்திர விடுதியில் தங்குவதாகவும் அங்கு உணவு சாப்பிடுவதாகவும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஞ்சை விலாஸ் என்ற சிறிய உணவகத்தில் சிற்றூண்டி சாப்பிட்டது பற்றி தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் பதிவு வருமாறு;
''திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற, 'விஞ்சை விலாஸ்' உணவகத்தில் இன்று, பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுடன் சென்று, காலை உணவு உண்ணும் வாய்ப்பு கிடைத்தது.
1924 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவகம், நூறு ஆண்டுகளாக, தரத்திலும், சுவையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பது மிகவும் சிறப்புக்குரியது. இங்குள்ள அனைத்து உணவுகளும் பழமை மாறாமல், வீட்டில் செய்யப்படும் முறையிலேயே செய்வதால், இத்தனை ஆண்டுகளாக பொதுமக்கள் ஆதரவைத் தொடர்ந்து பெற்று வருகிறது.
மேலும் பல நூறு ஆண்டுகள் இந்த உணவகம் சிறப்புடன் செயல்பட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications