சொந்த வீடு இல்லாததால் நளினிக்கு பரோல் மறுப்பு... முதல்வரிடம் முறையிட முடிவு
மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால் பரோல் கோரி விண்ணப்பித்த நளினியின் விண்ணப்பத்தை சிறைதுறையினர் நிராகரித்தனர்.
வேலூர்: சொந்த வீடு இல்லாததால் நளினிக்கு பரோல் மறுக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வேலூர் பெண்கள் சிறையில் நளினியும், ஆண்கள் மத்திய சிறையில் முருகனும் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 27 ஆண்டுகளாக இவர்கள் 7 பேரும் சிறையில் உள்ளனர்.

தந்தைக்கு உடல்நலம்
பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை சரியில்லாததால் 2 மாதம் பரோலில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நளினியின் மகளுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.

நளினியின் பரோல் மனு
இதனால் திருமண ஏற்பாடுகளை கவனிக்க நளினி 6 மாதம் பரோலில் கோரி சிறை துறையில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவரது பரோல் மனு நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், நளினி கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தனது மகள் திருமணத்திற்கு அவர் 6 மாதம் பரோல் கேட்டு மனு அளித்திருந்தார்.

சொந்த வீடு இல்லாததால் நிராகரிப்பு
அது தொடர்பாக விசாரித்த சிறை கைதிகளுக்கான நன்னடத்தை அதிகாரிகள், நளினிக்கு சென்னை மற்றும் வேலூரில் சொந்தமான வீடுகள் இல்லை. எனவே அவருக்கு பரோல் வழங்கக் கூடாது என சிறை நிர்வாகத்திற்கு கடிதம் அளித்துள்ளனர்.

1 மாதம் பரோல் கோரி விண்ணப்பிக்க முடிவு
சொந்த வீடு இல்லை என்பதற்காக பரோல் மறுப்பது தவறானது. இதுதொடர்பாக முதல்வர், சட்டத்துறை அமைச்சரை சந்தித்து நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என மனு அளிக்க உள்ளோம். முருகனும் தனது மகள் திருமணத்திற்காக 1 மாதம் பரோல் கேட்டு மனு அளிக்க உள்ளார் என்றார் புகழேந்தி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications