வேலூர் சிறைக்கு வந்தபோது என்னை மிரட்டினார் பிரியங்கா... நளினி பரபரப்புத் தகவல்
சென்னை: வேலூர் சிறையில் தன்னை சந்தித்த பிரியங்கா காந்தி, மிரட்டும் தொனியில் பேசியதாகவும், எந்த ஒரு வசதியையும் செய்து தரக்கூடாது என்று சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார், ராஜிவ் கொலை வழக்கில் 25 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும், நளினி.
நளினியின் தந்தை சங்கர நாராயணன் மறைவையடுத்து சென்னை, கோட்டூர்புரத்தில், நடைபெற்ற, அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக 12 மணி நேரம் மட்டும் நளினி பரோலில் வெளியில் விடப்பட்டார்.
அப்போது, ஜூனியர் விகடன் இதழுக்கு நளினி அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள் இதோ:
பரோல் கிடைக்கும் என்று கடைசி நிமிடம் வரை நம்பவில்லை. என் தந்தையின் உடல்நிலை மோசமானதை அடுத்து, கடந்த ஒரு மாதமாக பரோல் கேட்டுப் போராடினேன். கிடைக்கவில்லை. அவர் இறந்தபிறகுதான், பரோல் கிடைத்தது.

கொலையில் தொடர்பில்லை
நான், என் கணவர், எங்களோடு சிறையில் இருக்கும் 5 சகோதரர்கள் என்று நாங்கள் யாரும் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள். அதுதான் உண்மை. எங்கள் கைகள் யாருடைய ரத்தத்திலும் நனைக்கப்படவில்லை. ராஜீவ் கொலைக்கும் இன்று சிறையில் இருக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

மகள் செய்த தவறேது
எனவே, 25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் எங்களை விடுதலை செய்ய வேண்டும். எனக்கு 25 வயதில், திருமண பருவத்தில், ஒரு மகள் இருக்கிறாள். எந்தத் தவறும் செய்யாத என் மகள், பெற்றோரைப் பிரிந்து இத்தனை ஆண்டுகளாக ஏன் இருக்க வேண்டும்? இத்தனை ஆண்டுகளில் சிறைக்குள் நிறையத் துன்பங்களை அனுபவித்து விட்டோம். ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது.

முதல்வர் மீது நம்பிக்கை
எங்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம். முதலமைச்சரை நாங்கள் நம்பி இருக்கிறோம். அந்த நம்பிக்கைதான் எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு நளினி தெரிவித்துள்ளார்.

மிரட்டும் தொனி
வேலூர் சிறையில் பிரியங்கா காந்தி, சில வருடங்கள் முன்பு, நளினியை தனிமையில் சந்தித்து பேசினார். அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள நளினி, அவர் பேசிய முழு விவரத்தையும் இப்போது சொல்ல முடியாது. ஆனால், அவர் என்னிடம் மிகவும் மிரட்டல் தொனியில் பேசினார். அங்கிருந்து பிரியங்கா கிளம்பும்போது, எனக்கு எந்த வசதியும் செய்து தரக் கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றார். இவ்வாறு நளினி கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications