தினகரன், சசிகலா புஷ்பா, டிராபிக் ராமசாமியை ஒரே போஸ்டில் வறுத்த நமது அம்மா!

தினகரன், சசிகலா புஷ்பா, டிராபிக் ராமசாமி ஆகியோரை ஒரே போஸ்டில் வறுத்தெடுத்தது நமது அம்மா.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன், சசிகலா புஷ்பா, டிராபிக் ராமசாமி ஆகியோரை நமது அம்மா நாளிதழ் தந்து தலையங்கத்தில் வறுத்தெடுத்துவிட்டது.

இதுகுறித்து நமது அம்மாவில் வேர் விட்டு அகலா விழுதும்... விரோதியோடு கூடிய பழுதும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் அம்மாவுக்குத் தெரியாமல் தவறான வழியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து திகார்கரன் அரசியல் நடத்துகிறார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதை அரசியல் உள்நோக்கம் கொண்ட சில ஊடகங்கள் தவறுதலாக சித்தரித்து வரும் நிலையில் அதற்கு தனது கடுமையான கண்டனத்தை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறிருக்க, அம்மாவால், தமிழ்நாட்டுக்குள்ளேயே தலைகாட்டக் கூடாது என்று பாண்டிச்சேரி பக்கமா துரத்தியடிக்கப்பட்ட டோக்கன் செல்வர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக அறிக்கைவிட்டு தன்னை ஏதோ அம்மா பக்தன் போல காட்டிக் கொள்ள முயற்சிப்பது வெட்கக் கேடல்லவா?.

அரசியல் தொடர்பு

அரசியல் தொடர்பு

உயிரிழந்த தாயின் பிரேதத்திற்குப் பின்னால் வந்து ஒளிந்துதான் நிற்கு முடியும் என்பதுதான் இந்த தலைவனுக்கும், அம்மாவுக்குமான அரசியல் தொடர்பு என்றிருக்க... அம்மாவின் நினைவு இல்லத்தின் மீது கொள்ளைகாரி என்று எழுதுவோம் என்று கொக்கரித்த ஆண்டிமுத்து ராசாவுக்கு எதிராக கண்டன அறிக்கை கொடுக்காத இந்த ஹவாலா தலைவன் அம்மா மீது அடுக்காய் வழக்குப் போட்டு நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில், அம்மாவை அலைக்கழித்து, அவரது ஆரோக்கியத்தை குலைத்து, அவரது ஆயுளையே குறைத்ததற்கு காரணம் சுப்பிரமணிய சுவாமி...

சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா

அதுபோலவே, அம்மாவின் அழகுத் திருமுகம் பொறித்த பதாகைகளை நடுரோட்டில் இறங்கி சேதப்படுத்துகிற பேனர் தின்னி டிராபிக் ராமசாமி... புரட்சித் தலைவி அம்மா மீது, பொய் வாரித் தூற்றி பாராளுமன்றத்திலேயே பழிபோட்டவர் நன்றி கெட்ட சசிகலா புஷ்பா....

செயல்படுகிறது திகார்கரன்

செயல்படுகிறது திகார்கரன்

இவர்கள் மட்டுமின்றி அம்மாவால் வெறுக்கப்பட்டு கழகத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட்ட திருப்பூர் சிவசாமி போன்றோர்களை எல்லாம் அருகில் அழைத்து வைத்துக் கொண்டு, கனிமொழிக்கு வாழ்த்துச் சொல்வது, கருணாநிதி பிறந்தநாளில் கட்சி அலுவலகம் திறப்பது... தேவைப்பட்டால் திமுகவோடு இணைந்து செல்வேன் என அறிக்கை விடுப்பது, திமுகவோடு திருட்டு உறவு வைத்து தேர்தலில் வெல்வது என்றெல்லாம் அம்மாவுக்கு எதிராகவும், அவர் வார்த்தெடுத்த அனைத்திந்திய அண்ணா திமுகவுக்கு எதிராகவும், செயல்படுகிற திகார்கரன்,...

சுட்டிக் காட்டி பழிபோடுதல்

"அம்மாவே உலகம், அனைத்திந்திய அமண்ணா திமுகவே உதிரம்" என நன்றி குன்றாது வாழுகிற நல்லவராம், கழகத்திற்கு முதல் வெற்றியை முன்மொழிந்த, திண்டுக்கல் சீமை பெற்ற அம்மாவின் அப்பழுக்கில்லா விசுவாசியாம், வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மீது, இட்டுக்கட்டி இல்லாததை சுட்டிக்காட்டி பழிபோடுவது கட்டப்பொம்மனை எட்டப்பன் விமர்சிப்பதற்கு சமமல்லவா?.... என்று தலையங்கத்தில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+