லொடுக்குப் பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கு... கருணாஸ் மீது 'நமது அம்மா' தாக்கு
லொடுக்குப் பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கும் என்று கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மூவரையும் விமர்சனம் செய்து செய்தி வெளியிட்டுள்ளது நமது அம்மா.
Recommended Video

சென்னை: மு.க.ஸ்டாலின் நடத்திய போட்டி சட்டசபையில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மூவர் கலந்து கொண்டதை கண்டித்து நமது அம்மாவில் செய்தி வெளியானது.
துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டேன் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து அவர் அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபையை கூட்டினார்.
இதில் அதிமுகவுக்கு எதிராக கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரியும் அடக்கம். இவர்கள் மூவரையும் விமர்சனம் செய்து நமது அம்மாவில் தலையங்கம் வெளியாகியுள்ளது.

பஃபூன் வேஷம்
அதில் இரட்டை இலை சின்னத்தாலும் ஈகைக்கும், வாகைக்கும் இலக்கணம் வகுத்த அதிமுக தொண்டர்களின் இமைதுஞ்சா உழைப்பாலும் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினரான மாற்றுக் கட்சியை சேர்ந்த நன்றிகெட்ட பேர்வழிகள் சிலர் திமுக நடத்திய கோமாளி மாதிரி சட்டமன்றத்துக்கு சென்று பஃபூன் வேஷம் கட்டியிருக்கிறார்கள்....

குட்டையை நோக்கி ஓடும்
என்ன செய்வது.... பன்றியைக் குளிப்பாட்டி பட்டுத் துணி கட்டிவிட்டாலும் அது கழிவு நீர் குட்டையை நோக்கித்தான் ஓடும் என்பதையே உறுதி செய்திருக்கிறது இந்த நிகழ்வு..

பாத்திரமறிந்து
ஆனாலும் ஒன்று, கோத்திரமறிந்து பெண்ணைக் கொடு... பாத்திரமறிந்து பிச்சை இடு என்று நம் முன்னோர்கள் வகுத்துச் சொன்ன முதுமொழியை நாமும் கொஞ்சம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை மேற்படி அநாமத்துப் பேர்வழிகளின் அநாகரிகச் செயல் சிந்திக்க வைக்கிறது..

இனி எப்படி தொகுதிக்குள்...
அது சரி , பொன்மனத்தாயின் பூ முகத்திற்காகவும், அவரது பொற்கரங்கள் சுட்டிக் காட்டிய பரிந்துரைக்காகவும், ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்கள், இன்றைக்கு ஆதாயத்திற்காக அணி தாவி இருக்கும் இந்த லொடுக்குப் பாண்டிகளை இனி எப்படி தொகுதிக்குள் தலைகாட்ட விடுவார்கள்...

ஆனால் மக்கள்
கழகம் மன்னித்து விடலாம்... அல்லது சட்டத்தின்படி தண்டித்தும் விடலாம்.... ஆனால் மக்கள் மன்றம் நன்றி கொன்ற ஈனப் பிறவிகளை நடமாட விடாதே?....
உரிய பாடத்தை ஓட்டு போட்ட மக்களே அரசியல் அவுசாரிகளுக்கு உணர்த்தும் தானே...?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications