காவிரி விவகாரம்: தாய் காட்டும் அன்பில் தடுமாற்றம் இருக்கலாமா? மத்திய அரசை விளாசிய நமது அம்மா!
காவிரி விவகாரத்தில் கர்நாடக தேர்தலை காரணம் காட்டிய மத்திய அரசை நமது அம்மா நாளிதழ் சரமாரியாக விளாசியுள்ளது.
Recommended Video

சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடக தேர்தலை காரணம் காட்டிய மத்திய அரசை நமது அம்மா நாளிதழ் சரமாரியாக விளாசியுள்ளது.
காவிரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி நீர் பங்கீட்டிற்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் அவகாசம் கோரியது.
கர்நாடக தேர்தலை காரணம் காட்டி காவிரி வழக்கில் மூன்றாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அவகாசம் கோரியது. பிரதமரும், அமைச்சரும் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளதால் ஒப்புதல் பெற முடியவில்லை என்று தெரிவித்தது.

தமிழகத்துக்கு எதிராக
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தமிழக விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் போக்கு தமிழகத்துக்கு எதிராக உள்ளதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
ஒரு கண்ணில் சுண்ணாம்பு
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நமது அம்மா நாளிதழ் கவிதை வடிவில் விளாசியுள்ளது. அதில் ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என தாய் காட்டும் அன்பில் தடுமாற்றம் இருக்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தீர்ப்புகளை கிடப்பிலிட்டு திரியலாமா?
வாக்குகளை மனதில் வைத்து வஞ்சகம் புரியலாமா, தேர்தல் முடிவை வைத்து தீர்ப்புகளை கிடப்பிலிட்டு திரியலாமா என்றும் கேட்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்வதாக மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசு சிதைப்பதா
தாய்நாடு என்று இந்தியாவை அழைப்பது அனைத்து மாநில மக்களையும் சமமாக நடத்துகிற சத்தியத்தில் நிலைக்க வேண்டும் என்பதால்தானே என்று கேட்டுள்ள நமது அம்மா நாளிதழ், அது மொத்தமும் பொய்ப்பதா, அதை மோடி அரசு முன்னின்று சிதைப்பதா என்றும் சாடியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications