‘உரக்கச் சொன்ன உச்ச நட்சத்திரம்’... நமது அம்மாவில் ரஜினிக்கு பாராட்டு
எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்து நமது அம்மாவில் ரஜினியை பாராட்டி தலையங்கம் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னை- சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை வரவேற்று ரஜினி பேட்டியளித்ததை அடுத்து நமது அம்மாவில் அவரை பாராட்டி தலையங்கம் வெளியாகியுள்ளது.
காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதி ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் 8 வழிச்சாலை திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் 8 வழிச்சாலை திட்டம் போன்ற பெரிய பெரிய திட்டங்களால் நாட்டுக்கு நன்மை ஏற்படும், வேலைவாய்ப்பு பெருகும் என்றார். எனினும் அவர் விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் ரஜினியை பாராட்டி நமது அம்மா நாளிதழ் தலையங்கத்தை வெளியிட்டுள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு
உரக்கச் சொன்ன உச்ச நட்சத்திரம் என்ற தலைப்பிலான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: எட்டு வழி பசுமை சாலைத் திட்டம் நாட்டுக்கு நலம் பயக்கும் திட்டம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார். மேலும் கழக அரசின் கல்விப் புரட்சியையும் அவர் வெகுவாக பாராட்டியும் இருக்கிறார். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

ஆளுங்கட்சி மீது பழி
உச்சி வெயில் அடித்தாலும் ஓங்கி மழை கொட்டினாலும் அத்தனைக்கும் காரணம் ஆளுங்கட்சிதா் என்று எதற்கெடுத்தாலும் எதிர்ப்புத் தெரிவிக்கிற உள்நோக்க சக்திகளுக்கு மத்தியில் அரசியல் சுய லாபங்களை தவிர்த்து, தமிழக அரசின் நன்நோக்கத்தை ரஜினிகாந்த் உரைகல்லாக நின்று உரசிப்பார்த்து வரவேற்றிருப்பது பாராட்டுக்குரியது...

நிஜத்தை பேசிய ரஜினி
ஏற்கெனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவர விவகாரத்திலும் அரசின் மீது அபாண்ட பழிபோட்டு அரசியல் லாபம் தேட திமுக உள்ளிட்ட கட்சிகள் வெறிகொண்டு அலைந்த நிலையில் அப்போதுபம் ரஜினிகாந்த் களத்தின் உண்மையை உள்வாங்கி நிஜத்தையே பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாராட்டு
காவிரி உரிமையை வென்றெடுத்தது, ஸ்டெர்லைட் ஆலைக்கு முற்று வைத்தது, ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு விடை கொடுத்தது, பிளாஸ்டிக் அரக்கனுக்கு தடை போட்டது, நீர் நிலைகளை தூர் வாரியது, நீராபானம் கொண்டு வந்தது, சட்டம் ொழுங்கை பேணிக் காப்பதில் சமரசம் கொள்ளாமல் ரவுடிகளை வேட்டையாடி அமைதியை நிலைநாட்டுவது.... என்றெல்லாம் திடமாகவும் தீர்க்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதை நோக்கி அழைத்து செல்லும் எடப்பாடியார் அரசின் தூய்மையான தொண்டுள்ளதிற்கு இதுபோன்ற உச்ச நட்சத்திரங்களின் பாராட்டு என்பது மேலும் ஊக்கத்தை தரும் தானே...
வரவேற்போம்... வாழ்த்துவோம்... என்று அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications