எச் ராஜா வருந்துவதை விட திருந்துவதே ரொம்ப முக்கியம்- நமது அம்மா
எச் ராஜா வருந்துவதை விட திருந்துவதே ரொம்ப முக்கியமானது என்று நமது அம்மா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை: பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச் ராஜா வருந்துவதை விட திருந்துவதே ரொம் முக்கியமானது என்று நமது அம்மா தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி இந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் முடிவுக்கு வந்தது. அதற்கு பதிலாக மக்கள் பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு கொடுத்தனர்.
இதையடுத்து அகர்தலாவில் உள்ள லெனின் சிலைகளை அடியோடு பெயர்த்து எடுக்கப்பட்டன.

சர்ச்சை கருத்து
கடந்த இரு நாட்களுக்கு முன்பு எச் ராஜா, தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறுகையில் திரிபுராவில் 25 ஆண்டுகால ஆட்சி முடிவடைந்ததால் லெனின் சிலை அகற்றப்பட்டது. அது போல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

அகற்றுவோம்
அப்போது தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை அகற்றுவோம் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நிகழ்ந்தன.

அட்மின் தான் காரணம்
எதிர்ப்புகள் எழுந்த நிலையில் நேற்று ராஜா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பெரியார் சிலை அகற்றப்படுவது குறித்து நான் கருத்து வெளியிடவில்லை. எனக்கு தெரியாமல் எனது அட்மின்தான் வெளியிட்டார். எனினும் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
திருந்த வேண்டும்
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் தலையங்கத்தில் எச் ராஜா வருந்துவதை விட திருந்துவதே ரொம்ப முக்கியம். அட்மின் தவறு என்று காரணம் கூறி கம்பி நீட்டுவதெல்லாம் நாணயமற்ற காரியமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications