For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீண்டகாலமாக முடங்கியே இருக்கும் நமது எம்.ஜி.ஆர் இணையதளம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆரின் இணையதளப்பக்கம் நீண்ட நாட்களாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரான முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் நேற்று கொண்டாடப்படுகிறது. இதற்காக, கொண்டாட்டங்கள் மாநிலம் முழுவதும் களைக்கட்டியுள்ளது. அதே சமயம், நாளிதழ்களில் விளம்பரங்கள் மூலம் வாழ்த்து செய்திகளை கட்சியினர் வெளியிட்டனர்.

Namadhu MGR portal hacked by the anti social elements

சமூக வலைதளங்களிலும், ஆதரவாளர்கள் பிறந்த நாள் வாழ்த்தை பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், அந்த கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழின் இணையதளம் நீண்ட நாட்களாக இயங்காமல் முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், www.drnamadhumgr.com இணையதளத்தில், தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 2016 சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெரும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 85% பேர் தி.மு.க கூட்டணி வெற்றி பெரும் என்று வாக்களித்திருந்தனர். வெறும் 12.92% ஆதரவு மட்டுமே அ.தி.மு.கவுக்கு ஆதரவாக கருத்து கூறியிருந்தனர். அப்போதே இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நமது எம்.ஜி.ஆர் இணையதளத்தை தற்போது திறந்தால் கூட, Official website of "Dr.Namadhu MGR" www.drnamadhumgr.com was hacked by the anti social elements. In view of it the web site has been temporarily suspended. Regret for the inconvenience என்ற வாசகம்தான் தெரிகிறது.

இதேபோல், கடந்த 2013 ஆம் ஆண்டு அதிமுக அதிகாரப்பூர்வ இணையதளத்தையும், அதிமுக ஆதரவு தொலைக்காட்சி இணையதளத்தையும் ஹாக்கர்கள் முடக்கினர் என்பது நினைவிருக்கலாம்.

English summary
"Dr.Namadhu MGR" www.drnamadhumgr.com was hacked by the anti social elements. In view of it the web site has been temporarily suspended.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X