வெங்கய்யாவின் விடுகதை.. பொன்னாரின் புதுக்கதை.. தமிழிசையின் தனிக்கதை.. அதிமுக 'பொளேர்'
அதிமுகவின் நமது எம்ஜிஆர் நாளேடு பாஜக தலைவர்களை கடுமையாக சாடியுள்ளது.
சென்னை: வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது எம்ஜிஆர் திடீரென பாய்ந்து சாடியுள்ளது.
அதிமுகவும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் அத்தனை மக்கள் நல விரோத திட்டங்களுக்குமே அதிமுக அரசு ஒப்புதல் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது எம்ஜிஆர் நாளேட்டில் திடீரென மத்திய அரசை தாக்கி ஒரு கவிதை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கவிதையில் பாஜக தலைவர்களும் தப்பவில்லை.

நதிநீர் பிரச்சனைகள்
கச்சத்தீவை தாரை வார்த்து கடல்சார் உரிமை இழந்தோம்!
காவிரியை மீட்பதற்கு காலமெல்லாம் முயன்றோம்!
முல்லையாற்று உரிமைக்கு மோதிச் சண்டை புரிந்தோம்!
பாலாறும் கோளாறாக பரிதவித்து நின்றோம்!
மேகதாதில் சூது சூழ மேலும் துன்பம் கண்டோம்!

நெடுவாசல், கதிராமங்கலம்
மீத்தேன் வந்து அச்சுறுத்த மீளாத்துயரில் உழன்றோம்!
நெடுவாசல் துயரலே நிம்மதியை இழந்தோம்!
கதிராமங்கலம் கண்ணீர் துடைக்க கரங்கள் தேடி அலைந்தோம்!
கீழடியின் பெருமை காக்க காலடியில் விழுந்தோம்!

ஈழம், நீட், எய்ம்ஸ்
ஈழத் துயரை தடுக்க முடியாம இயலாமையில் அழிந்தோம்!
‘உதய்'யை ஒப்புகிட்டு ஒத்துழைப்பு தந்தோம்!
சேவை மற்றும் சரக்கு வரிக்கு சேர்ந்து கோஷம் புரிந்தோம்!
‘நீட்'டுக்கும் தலைவணங்கி நெருக்கடியில் நெளிந்தோம்!
‘எய்ம்ஸ்' மருத்துவமனை எப்போது வரும்னு எதிர்பார்ப்பில் கரைந்தோம்!

விடுகதை, புதுக்கதை, தனிக்கதை
வர்தா புயல் நிதிக்கு கையேந்தி வழிபாத்துக் கிடந்தோம்!
வறட்சி நிவாரணம் வருமான்னு விழிபிதுங்கி நடந்தோம்!
கேட்டது எதுவும் கிடைக்கல.... கெட்டது எதுவும் விலகல...
வெங்கய்யா வந்து விடுகதை சொல்ல....
பொன்னார் வந்து புதுக்கதை சொல்ல....
தமிழிசை வந்து தனிக்கதை சொல்ல...

ராஜாவின் ஆண்ட்டி இண்டியன்
எச்.ராஜாவோ ‘ஆண்ட்டி இண்டியன்'னு ஆவேசம் கொள்ள....
ஆளுக்கு ஆளு இலவசமா அறிவுரைகள் அள்ள...
கூடவே கழகங்களில்லா தமிழகம்னு கலர் கலரா கனவுகளில் காவிகள் துள்ள...
கன்னித் தமிழ் பூமியின் கோப அலையை திசை திருப்ப
காதல் கிழவரசனோ கழக அரசைப் பழித்து கதைகள் பல சொல்ல...
மாற்றாந்தாய் போக்கை வெல்ல மன்றாடுது தமிழுலகம்!
மதியாலே சதியை வெல்ல மக்கள் சக்தியே துணையென்று மார் தட்டுது கழகம்!
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications