விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியம் தற்கொலையால் பெரும் பரபரப்பு.. விசாரணை அவ்வளவுதான்?
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் தற்கொலை செய்துள்ளதால் வருமான வரித்துறை விசாரணை பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஆர்.கே. இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக வருமான வரித்துறையினர் தமிழகத்தில் 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
ரூ.89 கோடி பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இச்சமயம் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரான நாமக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணியனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
அரசு ஒப்பந்த பணிகளை சுப்பிரமணியன் செய்து வந்தார். மேலும் விஜயபாஸ்கருக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையிலான பணப்பரிமாற்றங்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட ஏராளமான அரசு ஒப்பந்தங்கள் சுப்பிரமணியத்துக்கு கைமாறியது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தன.
விஜயபாஸ்கரின் கல்லூரிகள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை சுப்பிரமணியன் கவனித்து வந்ததாக கூறுப்படுகிறது. விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களிலும் சுப்பிரமணியன் பின்புலமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பிய நேரத்தில் சுப்பிரமணியனுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை வளையத்தில் சிக்கினார். இந்த சூழலில் மோகனூரில் உள்ள அவரது தோட்டத்தில் அவர் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
விஜயபாஸ்கர் வருமான வரித்துறையின் கிடுக்கிடி விசாரணையில் உள்ளதால் இந்த தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த தற்கொலை விவகாரத்தால் விசாரணை கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications