குழந்தையுடன் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொடூரக் கொலை
நாமக்கல்: நாமக்கல்லில் குழந்தையுடன் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் முனியப்பன் நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு . ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் பணி செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர் வீட்டிலேயே தையல் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், திருநாவுக்கரசு புதன்கிழமை இரவு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், குழந்தையுடன் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 10 மணியளவில் பிரியாவின் குழந்தை அழுது கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர்களது வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது, வீட்டுக்குள் பிரியா இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தாராம். இதுகுறித்து உடனடியாக அந்தப் பகுதி மக்கள் பிரியாவின் கணவர் திருநாவுக்கரசுக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர், பிரியாவின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில், பள்ளிபாளையம் போலீஸார் அந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டதில், பிரியாவின் கழுத்து சேலையால் இறுக்கப்பட்டிருந்ததுடன், அவரது முகத்தை தரையில் தேய்த்துக் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மேலும், தடயவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து, போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications