3 பாஸ்கரன்.. 2 ராஜேந்திரன்.. ஆனா ஓட்டுப் போடும் போது குழப்பமே வராது பாஸ்!
திருவள்ளூர்: திருவள்ளூர் சட்டசபைத் தொகுதியில் பாஸ்கரன் என்ற பெயரில் 3 சுயேச்சைகளும், ராஜேந்திரன் என்ற பெயரில் 2 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 5 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஓட்டுப் போடும்போது வாக்காளர்களுக்கு எந்தக் குழப்பமும் வராது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஒரே பெயரில் சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வந்து விடுவார்கள். இதுபோல நடப்பது சகஜம்தான். இதனால் வாக்காளர்களுக்கு குழப்பமாகி மாற்றி ஓட்டைப் போட்டு விடுவதும் உண்டு.
இந்த நிலையில் திருவள்ளுர் தொகுதியில் திமுக சார்பில் வி.ஜி.ராஜேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல சுயேட்சையாக டி.ராஜேந்திரன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மறுபக்கம், அதிமுக சார்பில் ஏ.பாஸ்கரன் வேட்புமனுதாக்கல் செய்துள்ளார். அதேபோல் சுயேச்சையாக ஏ.பாஸ்கரன், இன்னொரு சுயேட்சை வேட்பாளர் என்.பாஸ்கரன் என மொத்தம் 3 பேர் அதே பெயரில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு பரிசீலனையின்போது அதிகாரிகளுக்கே சற்று குழப்பமாகி விட்டது. இருப்பினும் அனைத்து வேட்பு மனுக்களையும் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஒரே பெயரில் இத்தனை பேர் இருப்பதால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படாது என்று தேர்தல் அதிகாரிகள் கூறுகிறார்கள். தற்போது வேட்பாளரின் பெயருக்கு அருகே அவரது படமும் இடம் பெறும். எனவே வாக்காளர்களுக்கு நிச்சயம் குழப்பம் வராது என்று கூறினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications