நாய்கள் கண்காட்சி.. அத்தனை பேரையும் கவர்ந்திழுத்த நமீதாவின் 'சாக்லேட்'
சென்னை: சென்னையில் நடந்த நாய்களுக்கான கண்காட்சியில் விதம் விதமான நாய்கள் கலந்து கொண்டன. விரைவில் அரசியல் கடலில் குதிக்கக் காத்திருக்கும் நாயகி நமீதாவின் நாய் சாக்லேட்டும் இதில் கலந்துகொண்டு அசத்தி விட்டது.
மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் இந்த கண்காட்சி நடந்தது. ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த இதில் ஏகப்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.
நமீதாவும் தனது நாய் சாக்லேட்டுடன் கலந்து கொண்டு அசத்தினார். நமீதாவின் நாயைப் பார்த்து அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டனர். அத்தனை குட்டி நாய் இது.

7 சுற்றுப் போட்டி
மொத்தம் 7 சுற்றுக்களில் போட்டி நடந்தது. சொல் பேச்சு கேட்பது உள்ளிட்ட பிரிவுகளில் நாய்கள் கலந்து கொண்டன.

நேற்று கேட் வாக்
நேற்று நாய்களுக்கான அலங்கார அணிவகுப்பு அதாவது கேட் வாக், பிட்னஸ் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

365 நாய்கள்
இந்தப் போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 365 நாய்கள் கலந்து கொண்டன. மொத்தம் 45 இன வகை நாய்கள் பங்கேற்றன.

நமீதாவின் க்யூட் சாக்லேட்
இதில் நமீதாவின் சாக்லேட் நாயும் ஒன்று. இதை பலரும் ஆர்வமாக பார்த்து ரசித்தனர். நமீதாவைப் போலவே அவருடைய நாய்க்கும் நிறைய ரசிகர்கள் கூடிவிட்டனர்.

விஜயகாந்த் வீட்டு ஹஸ்கி நாய்
அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தனது வீட்டு செர்பியன் ஹஸ்கி நாயுடன் வந்திருந்தார். அதற்கும் ஒரு கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தது.

நம்ம ஊர் நாய்கள்
இந்த நாய்களுக்கு நிகராக, அதை விட டெர்ரராக காட்சி தந்தவை நம்ம ஊர் ராஜபாளையம்,கோம்பை, சிப்பபிப்பாறை வேட்டை நாய்கள்தான்.பார்க்கவே மிரட்டலாக இருந்தன இவை.

வேடிக்கை பார்த்த சிபிராஜ்
இந்த நாய்க் கண்காட்சியை பெரும் திரளானோர் வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். நடிகர் சிபிராஜும் அவர்களில் ஒருவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications