கரூரில் கால் பதித்த நமோ டீக்கடை!
கரூர்: மதுரையைத் தொடர்ந்து தற்போது கரூரிலும் நமோ டீக்கடையைத் திறந்துள்ளனர்.
தனது தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் சில மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் மத்தியில் உரையாடிய குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, நான் மாணவனாக இருந்த போது, ரயில்களில் டீ விற்றேன். ‘சாய், சாய்' என பெட்டிபெட்டியாகச் சென்று கூவி விற்ற அனுபவம் உள்ளது.
ஆதனால் தான், இன்று ஒரு மாநிலத்தின் முதல்வராகி உள்ளேன். இதற்கு காரணம் திறமையும். உழைப்பும் இருந்தால் இமயத்தைக் கூட நம் வசப்படுத்தலாம் என்று கூறியிருந்தார்.
இதை சமாஜ்வாதி கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான நரேஷ் அகர்வால், டீக்கடை நடத்திய மோடி, பிரதமர் பதவிக்கு ஆசைப்படக் கூடாது என்று ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து காங்கிரஸார் இதைப் பிடித்துக் கொண்டனர். டீ விற்றவர் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.
உச்சமாக, டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரியக் கூட்டத்தில், மோடியால் பிரதமராக முடியாது, காங்கிரஸ் கூட்டங்களில் அவர் டீ விற்கத்தான் லாயக்கு என்று தமிழகத்தை சேர்ந்த எம்.பி. மணிசங்கர் அய்யர் பேசியனார். இதை இப்போது அரசியலாக்கி விட்டது பாஜக. அதாவது நாடு முழுவதும் மோடி பெயரில் டீக்கடைகளையும், பலசரக்குக் கடைகளையும் திறக்க ஆரம்பித்துள்ளனர்.

நாடு முழுவதும் டீ விற்பனை
அதேபோல 300 நகரங்களில், 1,000 டீக்கடைக்காரர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடும் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது.
நாடு முழுவதும் ‘நமோ டீக்கடை' என்ற பெயரில், டீக்கடைகளை பாஜகவினர் திறந்து வருகின்றனர். அத்துடன், காங்கிரஸ் அலுவலகங்கள் அருகே, டீ விற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மதுரையில் மோடி டீக்கடை
சமீபத்தில் மதுரையில் நரேந்திர மோடி டீக்கடை திறக்கப்பட்டது. இந்த நிலையில்,கரூர் மாவட்டத்தில், பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சார்பில் நகைக்கடை, டீக் கடை, பலசரக்குக் கடை கடைகளை தொடங்கி அதன் மூலம் மோடி ஆதரவுப் பிரசாரத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

கரூரிலும் டீக்கடை
முதல் கட்டமாக, கரூரில் மோடி பெயரில் தேநீர் டீக்கடைகளை ஏற்படுத்தியுள்ள பா.ஜ.க.னர், அந்த இடத்தை வாக்காளர்களை சந்திக்கும் பிரசார தளமாகப் பயன்படுத்திக் வருகின்றனர்.

பல ஊர்களில் தொடக்கம்
கரூர் மாவட்டத்தில், கரூர் நகரம், ராயனூர், தோகமலை, குளித்தலை , கிருஷ்ணராயபுரம் , வேலாயுதம்பாளையம், சின்னதாபுரம், அரவக்குறிச்சி என போன்ற பல்வேறு பகுதிகளில் இத்தகைய தேநீர் டீக்கடைகளை பாஜகவினர் துவக்கி வருகின்றனர்.

நமோ டீஸ்டால் மற்றும் உணவகம்
ராயனூர், பொன்நகரில் நமோ டீ ஸ்டால் மற்றும் உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து , நமோ டீ ஸ்டால் மற்றும் உணவகத்தின் உரிமையாளர் நக்கீரன் என்பவர் கூறுகையில், பா. ஜ .க பிரதமர் வேட்பாளர் மோடியை ஆதரித்து தமிழ்நாடு நமோ பேரவையின் சார்பாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஓரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் நமோ பேரவை சார்பாக, நமோ டீ ஸ்டால் மற்றும் உணவகம் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூரில் முதன்முறையாக ராயனூர், பொன்நகரில் நமோ டீ ஸ்டால் மற்றும் உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கடை மூலம் நரேந்திர மோடியின் புகழை பரப்புவோம். மோடி தான் பிரதமர் பதவிக்கு தகுதியான நபர் என்பதை மக்கள் மனதில் பதிவு செய்வோம் என்கிறார்.

கிண்டலை மக்கள் ஏற்கவில்லை
பாஜக கரூர் மாவட்ட தலைவர் சிவசாமி கூறுகையில், பல ஆண்டுகால அரசியல் அனுபவப்படி சொல்கிறேன். நாடு முழுவதும் வீசும் மோடி அலையால், வரும்தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

ஓய மாட்டோம்
மோடியை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிலர் கூறியதை நாடும், நாட்டு மக்களும் ஏற்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க பொது மக்களே தயராகிவிட்டனர். இதன் எதிரொலியாக தான் நாடு முழுவதும் நமோ டீக் கடைகள் உருவாகி வருகின்றது. கரூரிலும் உருவாகியுள்ளது. தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் நமோ கடைகளை உருவாக்குவோம். மோடியை பிரதமர் பதவியில் அமர வைக்காமல் ஓயமாட்டோம் என்றார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications