Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தற்கொலைக்குக் காரணம் நந்தினியின் அப்பாதான்.. கணவர் கார்த்திக் பரபரப்பு கடிதம்

திருமணமான சில மாதங்களிலேயே தாய் வீட்டிற்கு சென்ற நடிகை மைனா நந்தினி விவாகரத்து கேட்டு அடம் பிடித்ததாக தற்கொலை செய்து கொண்ட அவரது கணவரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணமான சில மாதங்களியே கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார் மைனா நந்தினி. விவாகரத்து கேட்டு அடம் பிடித்ததாகவும், ஆனால் கார்த்திக்கிற்கு விவாகரத்து தர சம்மதம் இல்லை என்றும் இதனால் ஏற்பட்ட தகராறே கார்த்திக் தற்கொலை செய்து கொள்ள காரணமாக அமைந்து விட்டது என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தனது தற்கொலைக்குக் காரணம் நந்தினியின் அப்பாதான் என்றும் கார்த்திக் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வம்சம் படத்தில் அறிமுகமான நந்தினி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்தார். இதனையடுத்து அவர் மைனா நந்தினியானார். ஜீ தமிழில் டார்லிங் டார்லிங் சீரியலில் நடித்து வரும் அவர், ரியாலிட்டி ஷோக்களில் நடனமாடியுள்ளார். தற்போதும் பிசியாக நடித்து வருகிறார் நந்தினி.

ஜிம் மாஸ்டருடன் திருமணம்

ஜிம் மாஸ்டருடன் திருமணம்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நந்தினிக்கும் கார்த்திக்கிற்கும் திருமணம் நடந்தது. சென்னையில் சொந்தமாக ஜிம் வைத்துள்ளார் கார்த்திக். இவர்கள் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர்.

கசந்த மண வாழ்க்கை

கசந்த மண வாழ்க்கை

திருமணமான சில மாதங்களிலே மைனா நந்தினி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாராம். கார்த்திக் உடனான பிரிவுக்குப் பின்னர் விவகாரத்து கேட்டு வற்புறுத்தினாராம். காரணம் ஏற்கனவே கார்த்திக் ஒரு பெண்ணை காதலித்தவர் என்றும் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் நந்தினிக்கு தெரியவந்தது.

விவகாரத்து கேட்ட நந்தினி

விவகாரத்து கேட்ட நந்தினி

பெற்றோர் வீட்டில் இருந்த நந்தினி டிவி சீரியல்கள், நிகழ்ச்சிகளில் பிசியானார். விவாகரத்து கேட்டு அவர் வற்புறுத்தினாலும் கார்த்திக் விவகாரத்து தர சம்மதிக்கவில்லை. வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ்வேன் என்று கார்த்திக் கூறியதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு நந்தினி சம்மதிக்கவில்லையாம்.

விஷம் குடித்து தற்கொலை

விஷம் குடித்து தற்கொலை

கார்த்திகேயன் நேற்று இரவு விருகம்பாக்கத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். கார்த்திகேயன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கான காரணம் நந்தியின் தந்தைதான் என்று கார்த்திக் கடிதம் எழுதி வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உறவினர்கள் குற்றச்சாட்டு

உறவினர்கள் குற்றச்சாட்டு

திருமணமாகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை கலைஞர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தினியின் தொடர் வற்புறுத்தலே கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்று கார்த்திக்கின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+