கூவம் பாவத்தை போக்கினாலும் கருவாடு மீன் ஆனாலும் ஓபிஎஸ் முதல்வராக முடியாது: நாஞ்சில் சம்பத் 'பொளேர்'
கூவம் பாவத்தை போக்கினாலும் கருவாடு மீன் ஆனாலும் ஓபிஎஸ் முதல்வராக முடியாது என நாஞ்சில் சம்பத் சாடியுள்ளார்.
சென்னை: எட்டிக்காய் இனித்தாலும் கூவம் பாவத்தை போக்கினாலும் கருவாடு மீன் ஆனாலும் ஓபிஎஸ் மீண்டும் முதல்வராகவே முடியாது அதிமுக (அம்மா) கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் சாடியுள்ளார்.
நாஞ்சில் சம்பத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா முதலமைச்சர் பதவிக்கு வரவேண்டும் என நினைத்ததுதான் எல்லா பிரச்சினைக்கும் காரணம், ஆட்சி மாற்றம் வரும் அப்போது அம்மா மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார்.
அம்மா இறந்த பிறகு 75 நாட்கள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் புலம்புவது உண்மையானால் அப்போது விசாரணை கமிஷன் வைத்து இருக்க வேண்டும்.

நாடகமாடும் பாவி
மெரீனா புரட்சியில் ஈடுபட்ட மாணவர்களின் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு விசாரணை கமிஷன் அமைத்த ஓ.பன்னீர்செல்வம் அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றால் ஏன் விசாரணை கமிஷன் அமைக்கவில்லை? அரசியலில் மிகப்பெரிய பாவத்தை துணிந்து செய்த இந்தப்பாவி பிரச்சினையை திசைதிருப்புவதற்கு இப்படி நாடகம் ஆடுகிறார்.

உளறிக் கொட்டல்
இவர் ஆட்சிக்கு வருவாராம், விசாரணை கமிஷன் வைப்பாராம், கட்சியைக் காட்டிக் கொடுத்த ஓ.பன்னீர்செல்வத்திடம் விலை போன காலாவதியான ஒருவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்கிற பொழுது இப்படி உளறிக் கொட்டியிருக்கிறார்.

ஆன்மாக்கள், ஆவிகளோடு பேசுகிறவர்
பன்னீர்செல்வம் எப்போது ஆட்சிக்கு வரப்போகிறார்? எப்படி ஆட்சிக்கு வருவார், ஆன்மாக்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர் அதை விவரமாக சொன்னால் நன்றாக இருக்கும்.

ஒருநாளும் முதல்வராக முடியாது
எட்டிக்காய் ஒருநாள் இனிக்கலாம், கூவம் பாவத்தை போக்கலாம், கள்ளிப்பால் கண் நோயை நீக்கலாம் , கறந்த பால் மடிபுகுந்தாலும் புகலாம், கருவாடு மீன் ஆகலாம், நீலவானம் நிலத்தில் விழுந்தாலும் விழலாம் ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் என்ற துரோகி ஒருநாளும் இனிமேல் முதல்வர் ஆகவே முடியாது.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications