பதவி பறிப்பால் அதிருப்தி.. திமுகவில் இணைகிறார் நாஞ்சில் சம்பத்?
சென்னை: அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாஞ்சில் சம்பத், திமுகவுக்கு தூது விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவில் இருந்து வைகோ விலகி மதிமுகவை ஆரம்பித்தபோது, உடன் சென்ற முக்கிய புள்ளிகளில் ஒருவர் நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை, மதிமுக மேடைகளில் வறுத்தெடுத்து வந்தார்.
இந்நிலையில், வைகோவுடன், நாஞ்சிலாருக்கு பிளவு ஏற்பட்டு, அதிமுகவில் ஐக்கியமானார். நாஞ்சிலாருக்கு, அதிமுகவின், துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

தத்து பித்து பேட்டி
இந்நிலையில், தொலைக்காட்சி சேனல்களின் கலந்துரையாடல்களில் பங்குபெற்று வந்த நாஞ்சில், தலைமைக்கு பிடிக்காத வகையில் பேசிவந்ததால், அவரின் துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மனக்குமுறல்
தேர்தல் நெருங்கும் நிலையில், பதவி பறிப்பு நடந்துள்ளதால், தனக்கு கட்சியில் செல்வாக்கு குறைந்துவிடும், தேர்தல் பரப்புரைகளில் தன்னை பேச நிர்வாகிகள் அழைக்க மாட்டார்கள் என்ற மனக்குமுறலில் உள்ளார் நாஞ்சில் சம்பத்.

கடிதம்
எனவே, தனது நீக்கம் குறித்த மனக்குமுறலை அதிமுக தலைமைக்கு கடிதமாக நாஞ்சிலார் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதிமுகவில் இருந்து தான் விலகிய பிறகு அதிமுக தலைமைக்கு காட்டிய விசுவாசம் குறித்து நாஞ்சிலார் தனக்கே உரித்தான, மனதை உருக்கும் வார்த்தைகளோடு கடிதம் எழுதியுள்ளாராம்.

திமுகவுக்கு
ஒருவேளை, இந்த கடிதத்துக்கு எந்த பதிலும் இல்லையென்றால், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேரும் திட்டத்தில் நாஞ்சிலார் உள்ளார் என கூறப்படுகிறது. திமுகவுக்கு இதுபற்றி தூது விட்டிருப்பதாகவும் தெரிகிறது. இது குறித்து தனது ஆதரவாளர்களிடம் நாஞ்சில் விவாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

திமுக யோசனை
திமுகவுக்கு நாஞ்சில் சம்பத் வந்தால், சாதகமா அல்லது பாதகமா என்பது பற்றி திமுக அலசி ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. சமூக தளங்களில் நாஞ்சிலார் படாதபாடு படுவதால் திமுக தரப்பில் யோசனை கொஞ்சம் இழுவையாக போய்க்கொண்டிருப்பதாக தகவல்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications