தாண்டமுடியாத அகழி டிடிவி தினகரன்... நாஞ்சில் சம்பத் 'தடாலடி' புகழாரம்!
டிடிவி தினகரன் தாண்ட முடியாத அகழி, அணைக்க முடியாத நெருப்பு, தள்ளி போட முடியாத தாகம் என்று நாஞ்சில் சம்பத் புகழாரம் சூட்டினார்.
சென்னை: அதிமுக டிடிவி தினகரனின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சித் சம்பத் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த தினகரனை ஒதுக்கி வைப்பது என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இது அதிமுகவில் வார்தா புயலை காட்டிலும் மிக வேகமாக புயல் வீசியது.
தினகரனை நம்பி தாங்கள் இல்லை என்று ஜெயக்குமார் கூறியிருந்தார். ஆனால் தினகரனுக்கு இதுவரை 31 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் எடப்பாடி அரசு கவிழும் நிலை ஏற்படலாம் என்று அரசியல் நோக்காளர்கள் கருதுகின்றனர்.

தினகரன் கட்டுப்பாட்டில்...
டிடிவி தினகரனை அவரது பெசன்ட் நகர் வீட்டில் சந்தித்து விட்டு வெளியே வந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிகையில், அதிமுக தினகரனின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

காட்டிக் கொடுக்க...
கட்சியையும், ஆட்சியையும் காக்க தினகரனால் மட்டுமே முடியும். டிடிவி தினகரன் வழி நடத்த வேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்லும் குணம் கொண்டவர் அவர். இன்னும் 2 மாதங்களில் தேர்தல் வரும் என்று காட்டி கொடுக்க கதவுகளை திறந்தே வைத்திருக்கிறார் எம்.பி. மைத்ரேயன்.

அதிமுக வெற்றி பெறும்
முதல்வர் பதவியை மட்டுமே குறிகோளாக கொண்டுள்ள முக ஸ்டாலினும் இதேபோல் மறுதேர்தல் வரும் என்று கூறி வருகிறார். அதிமுக ஆட்சியின் ஆயுளை மக்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி ஆட்சி நடக்கும். அந்த ஆயுள் முடிந்த பிறகும் சரி, தற்போது தேர்தல் வந்தாலும் சரி அதிமுகதான் வெற்றி பெறும்.

பச்சை துரோகி
ஓ.பன்னீர் செல்வம் ஒரு பச்சை துரோகி. தங்களால் ஆட்சி கவிழாது என்று தான் செய்த தவறுக்கு ஓபிஎஸ் பிராயசித்தம் தேடுகிறார். டிடிவி தினகரன் வித்தியாசமான தலைவர். தள்ளிபோட முடியாத தாகம், தாண்ட முடியாத அகழி, அணைக்க முடியாத நெருப்பு என்றார் நாஞ்சில் சம்பத்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications