நாஞ்சில் சம்பத் வச்சிருந்த காரை இப்போது யார் வச்சிருக்கா தெரியுமா?
அதிமுகவால் நாஞ்சில் சம்பத்துக்கு வழங்கப்பட்ட இன்னோவா கார் திரும்ப பெறப்பட்டு அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டது.
Recommended Video

சென்னை: அதிமுகவால் நாஞ்சில் சம்பத்துக்கு ஜெயலலிதா வழங்கிய இன்னோவா கார் திரும்ப பெறப்பட்டு அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
மதிமுகவில் இருந்த நாஞ்சில் சம்பத், அதன் பொதுச் செயலாளர் வைகோவுடனான கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலலிதாவை நேரில் சந்தித்து 2012-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.
அவருக்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்த ஜெயலலிதா பிரசாரத்துக்கு செல்ல வசதியாக அவருக்கு இன்னோவா காரை பரிசாக அளித்தார். இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவை தலைமையேற்க கழக நிர்வாகிகள் அழைத்த போது சசிகலாவுக்கு எதிராக கருத்து கூறி ஜெயலலிதா அளித்த இன்னோவா காரை சசிகலாவிடம் திருப்பி அளித்தார்.

இன்னோவா சம்பத்
இதையடுத்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் சசிகலாவை ஆஹா ஓஹோ என புகழ்ந்தார் நாஞ்சில். அதற்கு அவருக்கு கிடைத்தது மீண்டும் அதே இன்னோவா. இதுகுறித்து சமூக வலைதளங்களில் சம்பத் வறுத்தெடுக்கப்பட்டு அன்று முதல் நாஞ்சில் சம்பத் என்ற பெயருக்கு பதில் இன்னோவா சம்பத் என்றே அழைக்கப்பட்டார்.

அதிமுக தோல்வி
தற்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டதால் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்து வருகிறார் சம்பத். ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் தினகரனுக்கு ஆதரவாக உள்ள அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணியினர் நீக்கினர்.

அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி
அவர்களுள் நாஞ்சில் சம்பத்தும் அவரது கொள்கை பரப்பு செயலாளர் பதவி உள்பட அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் கழகத்தின் இல்லாத நாஞ்சில் சம்பத் கழகம் சார்பில் பிரசாரத்துக்காக வழங்கப்பட்ட இன்னோவா காரை திருப்பி அளிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரப்பட்டது.

ஓபிஎஸ் பெயரில் பதிவு
அதன்படி அவர் ஜெயலலிதா வழங்கிய இன்னோவா காரை அதிமுக தலைமை கழகத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து தற்போது அந்த கார் கழகத்தின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை பார்க்கும் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் செந்தில், கவுண்டமணி காமெடியான சொப்பன சுந்தரி சீன்தான் ஞாபகத்துக்கு வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications