நாஞ்சில் சம்பத்தைப் பார்த்தீங்களா.. என்ன பேசுனார்னு கேட்டீங்களா..!
தமிழகத்தின் அடுத்த முதல்வர் நானாக கூட இருக்கலாம் என்று நாஞ்சில் சம்பத் சீரியஸாக கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வர் நானாகவும் இருக்கலாம் என்று நாஞ்சில் சம்பத் கூறியது காமெடிக்காக இல்லை... சீரியஸாகவே யோசிக்க வைத்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும், டிடிவி தினகரன் ஆதரவாளரை முதல்வராக்க வேண்டும் என்பது சசிகலா குடும்ப உறவுகளின் வலியுறுத்தல்.

ஓ.பன்னீர் செல்வத்துடன் கைகோர்த்த எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்.
எங்கள் பக்கம் 40 எம்எல்ஏக்கள் வர தயாராக இருக்கின்றனர் என்று கூறி வருகிறார் திவாகரன். விரைவில் முதல்வரை மாற்ற வேண்டும். சபாநாயகர் தனபாலை முதல்வராக முன் நிறுத்தி வருகின்றனர். தலித் ஆதரவு எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழுக்க தினகரன் தரப்பு முயற்சி செய்கிறது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், எங்களது ஒரே கோரிக்கை துரோகி பன்னீர்செல்வத்தை அமைச்சரவையில் இணைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்பதுதான் என்று கூறினார்
அப்போது செய்தியாளர்கள், 'எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகினால் யார் அடுத்த முதல்வர் என்று கேள்வி எழுப்பினர். 'ஏன் நான் கூட முதலமைச்சர் ஆகலாம்' என்று கூறினார். இது காமெடிக்கு கூறினாரா? அல்லது சீரியஸாக கூறினரா? என்று தெரியவில்லை.
தினகரன் ஆதரவாளர் ஒருவர் முதல்வராக வேண்டும் என்பதுதான் சசிகலா குடும்ப உறவுகளின் வலியுறுத்தல். இன்றைய அரசியல் சூழ்நிலையை பார்த்தால் யார் வேண்டுமானாலும் முதலமைச்சராக வர வாய்ப்பு உள்ளது என்பதே உண்மை
இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் கர்நாடக மாநில செயலாளரும் புகழேந்தியும் தமிழக முதல்வராக நாஞ்சில் சம்பத் வரலாம் என்று கூறியுள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications