மக்களின் ரத்தத்தை குடிக்க அகோர பசியோடு திரியும் காங்கிரஸ் பிதாமகன்கள்: நாஞ்சில் சம்பத்
திருப்பூர்: நாட்டு மக்களின் ரத்தத்தை குடிக்க காங்கிரஸ் பிதாமகன்கள் அகோர பசியோடு சுற்றுவதாக அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார்.
அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

காங்கிரஸ்
இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பது குறித்து குருஷேத்ர போர் நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி நாட்டை படுபாதாளத்தில் தள்ளி விட்டுள்ளது. காங்கிரஸ் பிதாமகன்கள் மக்களின் ரத்தத்தை குடிக்க அகோர பசியோடு உள்ளனர். காங்கிரஸுக்கு சமாதி கட்டுங்கள்.

ஜெயலலிதா
நாட்டில் பொருளாதாரம் சீரழிந்துள்ளதற்கு காங்கரஸே காரணம். காங்கிரஸுக்கு இந்த தேர்தல் மூலம் விடை கொடுத்து அனுப்புங்கள். இந்தியாவுக்கு நல்ல தலைமை வேண்டும் எனில் அதற்கு ஜெயலலிதா பிரதமர் ஆக வேண்டும்.

திமுக
திமுகவினர் தமிழகத்தின் உரிமையை விற்றுவிட்டனர். தேர்தலில் வென்றால் யார் பிரதமர் ஆவது என்று அவர்களால் கூற முடியுமா? இதே கோபியில் முதல்வர் ஜெயலலிதாவை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். ஜெயலலிதாவை விமர்சிக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் நம் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் ஆகும். புரட்சி தலைவி இந்திய தலைமையாக ஆக நாம் பாடுபடுவோம் என்றார் சம்பத்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications