தினகரனை ஆதரிப்பதற்காக காறி துப்பினால் துடைச்சுக்குவேன்- ஓபிஎஸிடம் போனா செத்துருவேன்: நாஞ்சில் சம்பத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரனை புகழ்ந்து பேசியதற்காக தம்மீது பொதுமக்கள் காறி துப்பினால் அதை துடைத்துக் கொள்வேன் என்றும் ஓபிஎஸ் அணிக்கு போக நேர்ந்தால் செத்துருவேன் என்றும் நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

மதிமுகவின் கொள்கைபரப்பு செயலராக வலம் வந்தவர் நாஞ்சில் சம்பத். வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அப்போது அவர் பிரசாரம் செய்வதற்காக இன்னோவா காரையும் ஜெயலலிதா கொடுத்திருந்தார்.

இன்னோவா சம்பத்

இன்னோவா சம்பத்

அன்று முதல் 'இன்னோவா' சம்பத் என அன்புடன் அழைக்கப்பட்டும் வருகிறார். ஜெயலலிதா மறைந்தபோது சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இன்னோவா காரை அதிமுக தலைமையகத்தில் திருப்பிக் கொடுத்தார்.

சசியிடம் சரண்

சசியிடம் சரண்

அடுத்த ஓரிருநாட்களிலே சசிகலாவை நேரில் சந்தித்து சரணாகதி அடைந்தார் சம்பத். சசிகலாவைத் தொடர்ந்து டிடிவி தினகரனுக்காக நாள்தோறும் புகழ்மாலை சூட்டுவதையே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறார் சம்பத்.

திவாகரன் தரப்பு டோஸ்

திவாகரன் தரப்பு டோஸ்

நாஞ்சில் சம்பத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில், தீரன், திண்ணியன், காலம் தந்த தலைமகன் என்றெல்லாம் ஏகத்துக்கும் தினகரனை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் நாஞ்சில் சம்பத். இதற்காகவே திவாகரன் தரப்பிடம் இருந்து செம டோஸும் வாங்கியிருந்தார் சம்பத்.

செத்துருவேன்

நாஞ்சில் சம்பத் சன் நியூஸ் டிவி சேனலுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், தினகரனை பாராட்டுவதற்காக மக்கள் என்னை காறி துப்பினால்... துப்பட்டும்.. அதை துடைத்துக் கொள்வேன் என கூறியுள்ளார். அதேபோல நீங்கள் ஓபிஎஸ் அணியில் இருக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, செத்துருவேன்... அப்படியே தற்கொலை செய்து கொள்வேன் என அதிரடியாக பேட்டியளித்திருக்கிறார் நாஞ்சில் சம்பத்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran's supporter Nanjil Sampath strongly opposed the merger of Teams OPs and EPs.
Please Wait while comments are loading...