நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்த நாராயணசாமி ஜெயிப்பாரா?
நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாராயணசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து கடந்த 26ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.

நேற்று வரை அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் மற்றும் அவருக்கு மாற்று வேட்பாளரான தமிழ்ச்செங்கோலன் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர். பாஜக, என்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவு அளித்துள்ளது.
வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளான இன்று புதுச்சேரி முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான நாராயணசாமி இன்று நண்பகலில் மனுத்தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் உடனிருந்தார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமிக்கு திமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. நாராயணசாமிக்கும், ஓம்சக்தி சேகருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
நாராயணசாமி வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராக நீடிக்க முடியும். நாராயணசாமிக்கு எதிராக அவரை தோற்கடிக்க அதிமுக, என்.ஆர். காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் முழு வீச்சில் களமிறங்கியுள்ளன. இடைத்தேர்தலில் நாராயணசாமி ஜெயிப்பாரா? நெல்லித்தோப்பு மக்களின் கைகளில் உள்ளது நாராயணசாமியின் தலைவிதி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications