மூளைச்சாவு: நரிக்குறவர் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் - பழைய மரபுகள் உடைப்பு
திருச்சி: தமிழகத்திலேயே முதல்முறையாக நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்த தங்களின் மகனின் உடல் உறுப்புகளை பழைய சம்பிரதாய மரபுகளை மீறி தானம் அளித்துள்ளனர் திருச்சியைச் சேர்ந்த நரிக்குறவ சமுதாய மக்கள்.
திருச்சி மாவட்டத்தில் துவாகூடியில் தேவாராயநேரி பகுதியை சேர்ந்தவர் ரவி. அவரது மகன் சரவணன், 23. நரிக்குறவை சமுகடந்த 23ம் தேதி துவாகூடியில் செல்லும் போது மோட்டர் சைக்கிள் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து 2 மருத்துவமனையில் சிசிக்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 25ம் மூளைச்சாவு அடைந்தார்.
நரிக்குறவ சமுதாய மரபுகள்
இதையடுத்து சரவணனின் தந்தை ரவியை சந்தித்த மருத்துவர்கள் சரவணன் மூளைச்சாவு அடைந்ததை கூறினார்கள். ஆனால் அவர்கள் அதனை நம்பவில்லை. தங்கள் மகன் மீண்டு வருவான் என்று நம்பினர்.ஒரு வழியாக மருத்துவர்கள் மூளைச்சாவு பற்றி ரவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விளக்கி கூறினர்.தொடர்ந்து சரவணணின் உடல் உறுப்புகளை மற்றவருக்கு தானமாக வழங்கினால், அவர்கள் மறு வாழ்வு பெறுவார்கள் என்றும் அவர்களிடம் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
கடும் எதிர்ப்பு
மருத்துவர்களின் கோரிக்கைக்கு ரவியின் உறவினர்களும் நரிக்குறவ சமுதாயத்தின் மூத்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் சமுதாயத்தினர் கடுமையான சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றுவர்கள் என்றும் இதற்கெல்லாம் எங்கள் சமுதாயத்தில் இடமில்லை என்றும் உடல் உறுப்பு தானத்துக்கு மறுப்பு தெரிவித்தனர்.
மருத்துவர்கள் பேச்சு
சரவணனின் தந்தை ரவி மற்றும் சகோதரிகளிடம் தொடர்ந்து பேசிய மருத்துவர்கள் மனதை மாற்றினர். சரவணனின் உடல் உறுப்புகள், பிற உயிர்களை வாழ வைக்கப் போவதாகவும் அவர்கள் வடிவில் உங்கள் மகனையும் சகோதரனையும் காணலாம் என்று மனதுருக வேண்டிக் கொண்டனர்.
உடல் உறுப்புகள் தானம்
இதையடுத்து சாஸ்திர சம்பிராதயங்களை தூக்கி எறிந்த ரவியும் அவரது மகள்களும் சரவணணின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். இதைத் தொடர்ந்து திருச்சி சித்தார் மருத்துவமனையில் சனிக்கிழமை பிற்பகல் இருதயம்,
சிறுநீரகம், இருதய வால்வுகள், கண்கள், கல்லீரல் ஆகிய 7 உறுப்புகள் தானாமாக பெறப்பட்டது.
ஹைதராபாத் பறந்த இதயம்
இதில், இருதயம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் திருச்சி மற்றும் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கும், கண்கள் மற்றும் கல்லீரல் திருச்சி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது. இதற்காக, மருத்துவமனையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு 10 நிமிடத்திற்கு இருதயம் கொண்டு செல்வதற்காக மாநகர காவல்துறை பாதுகாப்பு செய்யப்பட்டு ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தனி விமானம் மூலம் இருதயம் 1 மணி நேரத்திற்குள் ஹைதராபாத் கொண்டுச் செல்லப்பட்டு அங்கு ஒரு நோயாளிக்கு பொறுத்தப்பட்டது.
5 பேருக்கு மறுவாழ்வு
சரவணனின் கல்லீரல், திருச்சியில் சித்தர் மருத்துவமனையில் கல்லீரல் அழுகி அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒருவருக்கு பொருத்தப்பட்டது. இரு சிறுநீரகங்களும் ஒன்று ஃப்ரென்ட்லைன் மருத்துவமனையிலும் மற்றொன்று ஏ.பி.சி மருத்துவமனையில் ஒருவருக்கும் பொருத்தப்பட்டது. சரவணணின் இரு கண்களும் ஏ.ஜி கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இப்படி சரவணனின் உடல் உறுப்புகளால் 5க்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் முதல்முறை
இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ள தமிழகத்தில் சாஸ்திர சம்பிராதாயங்களை உடைத்து விட்டு நரிக்குறவ குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications