ஊழலுக்கு தேசிய விருது கொடுத்தால் முதல் விருது "இவருக்கு"த்தான்.. ஸ்டாலின் நக்கல்!
ஊழலுக்கான தேசிய விருதை முதலமைச்சருக்கு தரவேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி வைத்தால் முதல் விருதை முதலமைச்சர் பழனிசாமிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நாகர்கோவிலில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் ஸ்டாலினை தாக்கி பேசினார். அவர் மட்டுமல்லாது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சற்று அதிகமாகவே ஸ்டாலினை கண்டித்தும், விமர்சித்தும் பேசியிருந்தனர்.

ட்விட்டரில் பதில்
குறிப்பாக முதலமைச்சர் பேசும்போது, "ஸ்டாலின் பேசுவது அனைத்துமே பொய், கிடைத்த நேரத்தில் எல்லாம் நினைத்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார், பொய் பேசுவதற்கே அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்" என்று காட்டமாக கூறியிருந்தார். முதலமைச்சரின் இந்த பேச்சிற்கு ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் ட்டுவிட்டரில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
|
பதற்றம் நிறைந்த பேச்சு
"நான் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக, ஊழல் பண மூட்டைகளில் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கட்சியிலும் - ஆட்சியிலும் கொல்லைப்புறமாக நுழைந்து, ஊழலில் சிக்கி நீதிமன்ற வாசலில் தொங்கிக் கொண்டிருப்பதன் விளைவே இந்த பதற்றம் நிறைந்த பேச்சு!"
|
ஊழல் வழக்குகள்
"அகில இந்திய அளவில் ஊழலுக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று போட்டி நடைபெற்றால், அதில் முதல்விருதை பெறும் அத்தனை தகுதிகளும் இருக்கும் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இந்த ஆணவப் பேச்சுக்கு, அணி வகுத்து வரும் அவருடைய ஊழல் வழக்குகளே விரைவில் பதில் சொல்லும்." என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
|
ஆளுக்கொரு நீதி
இந்நிலையில் எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கும் ஸ்டாலின் தமிழக அரசை கண்டித்து மற்றொரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி, 'ஆளுக்கொரு நீதி-வேளைக்கொரு நியாயம்' என்ற நிலையில் அமல்படுத்தப்படுவது கடும் கண்டனத்துக்குரியது. கருணாஸை கைது செய்த காவல்துறை,பெண்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வி.சேகர் - உயர்நீதிமன்றத்தையே விமர்சித்த எச்.ராஜா ஆகியோரை இன்னும் கைது செய்யாதது ஏன்?" என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications