ஆந்திர என்கவுண்டர்: வீட்டுக்கு ஒரு அரசு வேலை... கொலையானோர் குடும்பத்தினர் எஸ்.டி.கமிஷனிடம் மனு
சென்னை: ஆந்திரா என்கவுண்டர் சம்பவத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக கூலித் தொழிலாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தார், தேசிய பழங்குடியினர் நல துணை ஆணையரிடம் கோரிக்கை அளித்தனர்.

ஆந்திராவின் சித்தூர் வனப்பகுதியில், செம்மரம் வெட்டியதாக கூறி, தமிழகத்தை சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டு பொசுக்கினர்.

இந்த என்கவுண்டர் சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேசிய பழங்குடியினர் நல துணை ஆணையர் ரவிதாகூர், தமிழ்நாடு பழங்குடியினர் நல துணை ஆணையர் வேணுபிரசாத் ஆகியோர், ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடனான சந்திப்பு இன்று, நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், மேல்குப்பசனாவூர் சின்னசாமி, ராஜேந்திரன், கோவிந்தசாமி, வெள்ளிமுத்து ஆகியோரின் உறவினர்களும், மேல்கனாவூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் தந்தை ராமசாமி உள்ளிட்ட 10 குடும்பத்தினர் இதில் பங்கேற்றனர்.

அப்போது, எங்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 10 ஏக்கர் நிலமும், பிள்ளைகள் கல்லூரி வரை படிக்கும் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதை பரிசீலிப்பதாக அதிகாரிகள் கூறினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications