சென்னை ஐஐடிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் “நோட்டீஸ்”!
சென்னை: பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்திற்கு தடை விதித்தது குறித்து விளக்கம் அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை ஐஐடியில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இது தொடர்பாக பேசிய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா, "சென்னை ஐஐடியில் பிற அமைப்புகள் செயல்பட அனுமதிக்கப்பட்ட சூழலில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தை மட்டும் தடை செய்ய காரணம் என்ன" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இளைஞர்கள் கல்வி வளாகத்தில் சுதந்திரமாக பேசவும், தங்களின் தேவைகளை பெற குரல் எழுப்பி போராடவும் உரிமை உள்ளது என புனியா குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மாணவர்களை ஒடுக்குவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல் என்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு சரியான புரிதல் இல்லை எனவும் கூறியுள்ளார்.
சென்னை ஐஐடி விவகாரத்தில் தலித் அமைப்புகள் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும் என மேலும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications