நெடுவாசல்: மத்திய மாநில அரசுகளை கல்லால் அடித்து விரட்டுவது போல் நூதன போராட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 106வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இரண்டாவது கட்டமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த இரண்டாவது கட்டபோராட்டத்தில் கிராம மக்கள் பலர் பங்கேற்று வருகின்றன.

Neduvasal Protest continues as 106th day

இந்நிலையில் போராட்டம் இன்று 106வது நாளை எட்டியுள்ளது. நாள்தோறும் பல்வேறு நூதன போராட்டங்களில் நெடுவாசல் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

'Protest girl' Valarmathi is suspended from Selam periyar university-Oneindia Tamil

நேற்று நடைபெற்ற 105வது நள் போராட்டத்தில் விவசாயிகள், பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யகோரி கோஷமிட்டனர். அப்போது மத்திய மாநில அரசுகளை கல்லால் அடித்து விரட்டுவது போல் சித்தரித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Neduvasal Protest continues as 106th day lots of villagers have participated in the protest. in the Yester day protest villagers acted to trace the govts from the village.
Please Wait while comments are loading...