மூதாட்டி மரண துயருடன் நெடுவாசலில் 22-வது நாளாக தொடரும் போராட்டம்!
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக 22-வது நாளாக போராட்டம் தொடருகிறது.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 22-வது நாளாக இன்றும் போராட்டம் தொடருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற மூதாட்டி உயிரிழந்த நிலையிலும் துயரையும் தாங்கிக் கொண்டு போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பொதுமக்களின் போராட்டம் தொடருகிறது. இந்தப் போராட்டத்தைக் கைவிட அரசு தரப்பில் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.

இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்று ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஒப்பாரி வைத்து நேற்று பெண்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த ஒப்பாரி போராட்டத்தில் பங்கேற்ற பொன்னம்மாள் என்ற மூதாட்டி திடீரென மயக்கமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த துயரையும் தாங்கிக் கொண்டு போராட்டம் தொடருகிறது. மேலும் நெடுவாசலில் நேற்று குளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் திரைப்பட இயக்குநர் கவுதமன் பங்கேற்றார். அப்போது பேசிய பெண்கள், முடிந்த அளவு நாங்களும் குரல் எழுப்பிவிட்டோம். இன்னமும் மத்திய அரசின் காதில் எங்கள் கோரிக்கை விழவில்லை. கழுத்தை அறுத்துக் கொண்டு செத்தாலும் சாவோமே தவிர போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறினர்.
இன்றும் 22-வது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றம் இன்று கூடும் நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் எழுப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications