ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை அறவழி போராட்டம் தொடரும்: நெடுவாசல் போராட்டக் குழு
அமைதியான முறையில் போராட்டத்தை தொடரப் போவதாக நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை அமைதியான வழியில் அறப்போராட்டம் தொடரும் என்று நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் விவசாய நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து அந்தப் பகுதியில் கடந்த 16ஆம் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் 18 வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்கள் பிரதிநிதிகளுடன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் போராட்டக் குழுவைச் சேர்ந்த செந்தில்தாஸ், ரமேஷ், அடைக்கலம், தட்சிணாமூர்த்தி, அழகர் உள்பட 50 பேர் கலந்துகொண்டனர். இதில், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஹைட்ரோ கார்பன் திட்ட காவிரி படுகை பிரிவு பொது மேலாளர் பவன்குமார் தலைமையிலான அதிகாரிகள், கிராமத்தினருக்கு திட்டம் குறித்து விளக்கம் அளித்தனர்.
திட்டத்தின் சாதக அம்சங்களைப் போராட்டக் குழுவினருக்கு விளக்கினர். மேலும், போராட்டக் குழுவினர் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தனர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும் போராட்டக்குழுவினர் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழுவினர், ஓஎன்ஜிசி அதிகாரிகள் அளித்த விளக்கங்கள் திருப்தி அளிக்கவில்லை எனவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை சுமுகமான அமைதி வழிப்போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications