சென்னை புறப்பட்டது நெடுவாசல் போராட்டக்குழு.. முதல்வருடன் இன்று சந்திப்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று சந்தித்து பேச உள்ளனர்.
புதுக்கோட்டை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசுவதற்காக நெடுவாசல் போராட்டக் குழுவினர் சென்னை புறப்பட்டனர். 9 பேர் கொண்ட குழுவினர் சென்னை தலைமைசெயலகத்தில் இன்று முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்க உள்ளனர்.
இயற்கை எரிவாயு என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி நெடுவாசல் மக்கள் கடும் போராட்டத்தில் 13 நாட்களாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயி அமைப்பினர், திரையுலகினர், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், சுற்றுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் போரட்டக்குழுவை சேர்ந்த ஒன்பது பேர் இன்று காலை 10 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச உள்ளனர். இதனிடையே ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் மாவட்ட எஸ்.பி, மற்றும் போராட்ட குழு உறுப்பினர் ஒன்பது பேர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் போராட்டக்குழுவினர் சென்னை புறப்பட்டனர்.
முன்னதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போராட்டக்காரர்களிடம் அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் சொன்ன எதையும் கிராம மக்கள் ஏற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications