ஹைட்ரோகார்பன் போராட்டத்தை கண்டுக்காத அரசு - கருப்பு துணி கட்டிய சிறுவர்களிடம் நெடுவாசல் மக்கள் மனு
நெடுவாசல் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய மாநில அரசுகளிடம் நெடுவாசல் மக்கள் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் கண்ணில் கருப்பு துணி கட்டிய சிறுவர்களிடம் மனு கொடுதது நெடுவாசல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுவாசல் கிராம மக்கள் மற்றும் மாநில அரசு ஒப்புதலின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று கூறிய மத்திய அரசு தனியார் நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தத்தை போட்டது.
இதனை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள் 50 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை சற்றும் கண்டு கொள்ளாத மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் கருப்பு துணி வாயிலும் கண்ணிலும் கட்டிக் கொண்டிருக்கும் சிறுவர்களிடம் மனு கொடுத்து போராட்டம் செய்தனர்.

நெடும் போராட்டம்
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று நெடுவாசல் மக்கள் 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினார்கள். அப்போது, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று மத்திய மாநில அரசுகள் உறுதி அளித்தது.

உறுதியை மறுத்து ஒப்பந்தம்
இந்நிலையில், மத்திய அரசு ஜெம் என்ற தனியார் நிறுவனத்திடம் மத்திய அரசு எரிவாயு எடுக்க ஒப்பந்தம் போட்டது. இதற்கு மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் தொடங்கிய போராட்டம் 50வது நாளாக தொடர்கிறது.

குற்றச்சாட்டு
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் ஹைட்ரோ கார்பன் எடுக்க மின் இணைப்பு உள்ளிட்ட எந்த அனுமதியும் கொடுக்க மாட்டோம் என்று போராட்டக் களத்திற்கே வந்து மக்களிடம் உத்தரவாதமாக எழுதிக் கொடுத்தனர். நெடுவாசல் திட்டத்திற்கு மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ள ஜெம் நிறுவனம் அனுமதி பெற மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ. 12 லட்சம் அனுப்பியுள்ளது. அதை திருப்பி அனுப்ப மக்கள் கேட்டுக் கொண்டனர். என்றாலும் இன்னும் அந்த பணத்தை திருப்பி அனுப்பாமல் வைத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம் என்று கிராமத்தினர் குற்றம்சாட்டினர்.

கண் கட்டி வாய் பொத்தி
இந்நிலையில் மத்திய மாநில அரசுகளும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டிக்கும் வகையில், கோரிக்கையை மனுவை, கண்கள் மற்றும் வாயில் கருப்புத் துணி கட்டிய சிறுவர்களிடம் கொடுத்து போராட்டம் நடத்தினார்கள். அமைதியாக இருக்கும் அரசுகளை எதிர்த்து நாள்தோறும் ஒவ்வொருவிதப் போராட்டத்தை நெடுவாசல் கிராமத்தினர் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications