ராம்குமார் மரணத்திற்காவது உரிய நியாயம் வேண்டும்… பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும் ராம்குமார் மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், சுவாதி படுகொலை குறித்து இன்னும் பதில் கிடைக்காத நிலையில், அவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரும் தற்போது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அவருடைய பெற்றோர்களும், வழக்கறிஞரும் இதனை கொலை என்று குற்றம் சாட்டியுள்ளனர். சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் மரணத்திற்காவது உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுக் கிடக்கிறது. விஷ்ணுபிரியா மரணம் உள்ளிட்ட பெண்கள் மீதான கொடுமைகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் இருக்கும் பயத்தை போக்க ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரேமலதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications