நோ மூக்குத்தி, நோ மோதிரம்.. அட தலைமுடிக்கு 'பின்' கூட குத்தக் கூடாதாம்! - கிறுகிறுக்க வைக்கும் நீட்
நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளதால் தேர்வு மையத்தினுள் என்னென்ன பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது, செய்யக் கூடாதவை என்னென்ன என்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உண்மையிலேயே இத்தனை கெடுபிடி தேவையா... அட இப்படி ஒரு தேர்வுதான் தேவையா எனக் கேட்க வைத்துள்ளது அந்த அறிவிப்பு.

இந்தாங்க அந்த அறிவிப்பு:
தேர்வு மையத்திற்கு காலை 9.30 மணிக்கெல்லாம் இருக்க வேண்டும். தாமதமாக வருவோர், உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
காகிதத் துண்டுகள், பென்சில் பாக்ஸ் உள்ளிட்ட அனைத்து வித பாக்ஸ்க்ளும் , பவுச், கால்குலேட்டர், பேனா, ஸ்கேல், அட்டை, பெண் டிரைவ், ரப்பர், லாக் அட்டவணை, ஸ்கேனர் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
தொலைத் தொடர்பு சாதனங்களான கைபேசி, ப்ளூடூத், இயர்போன், மைக்ரோபோன், பேஜர், ஹெல்த் பேண்ட் உள்ளிட்டவைகளையும் எடுத்துச் செல்லக் கூடாது. பெல்ட், தொப்பி, கைப்பைகள், கண்ணாடிகள், வாலட் உள்ளிட்டவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் ,மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், செயின் டாலர், பேட்ஜ், சட்டை பின், கைக் கடிகாரம், ப்ரேஸ்லெட், உள்ளிட்ட அணிகலன்களை பயன்படுத்தக் கூடாது. தலைக்கு ஹேர்பின் கூட குத்தக் கூடாது.
அரைக் கை வைத்த லேசான ஆடைகளையே அணிய வேண்டும். ஆடையில் பெரிய பட்டன்களோ, பேட்ஜ்கள், பின்களோ, பூக்களோ இருக்கக் கூடாது. ஷூ வகை காலணிகளை அணியக் கூடாது.
புகைப்படக் கருவி எடுத்துவரக் கூடாது. எந்தவிதமான உலோக பொருட்களையும் கொண்டுவரக் கூடாது. தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில்களுக்கும் அனுமதி இல்லை.
தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தேர்வு மையத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
இந்த விதிமுறைகளை மீறினால் குறிப்பிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications