நீட் தேர்வில் தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது மத்திய அரசு.. ம. நடராஜன் குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன் குற்றம்சாட்டினார்.

முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் ஈழப்போர் குறித்து ஓவியம் வரைந்த ஓவியர் வீரசந்தானத்தின் படத்திறப்பு விழா இன்று தஞ்சையில் நடைபெற்றது. இந்த விழாவில் ம. நடராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் காசி ஆனந்தன் ஓவியர் வீரசந்தானத்தின் படத்தை திறந்து வைத்தார்.

NEET exam, M Natarajan attacks Union govt

பின்னர் ம. நடராஜன் செய்தியாளர்களிடம், நீட் தேர்வில் தமிழக மாணவர்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றும் இதனை எதிர்த்து உயிர் மூச்சு உள்ளவரைப் போராட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பது மத்திய அரசு அதிகாரிகளின் பிள்ளைகளுக்காக கொண்டு வரப்பட்டது என்று கூறிய நடராஜன், அவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் பணி மாற்றம் செய்யப்படும் போது, அவர்களது பிள்ளைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கான உருவாக்கப்பட்டதுதான் சிபிஎஸ்சி பாடத்திட்டம் என்று விளக்கம் அளித்தார். அந்தப் பாடத்திட்டத்தை தற்போது அனைத்து மாணவர்களுக்கும் நடைமுறைப் படுத்த முயற்சி செய்து வருவது நியாயமற்றது என்றும் நடராஜன் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puthiya Parvai Editor M Natarajan has attacked Union government over NEET exam issue.
Please Wait while comments are loading...