நீட்: முதல் 25 இடத்தில் ஒரு தமிழர் கூட இல்லையே... வைகோ வருத்தம்
நீட் தேர்வு தர வரிசை பட்டியலில் ஒரு தமிழர் கூட இல்லாதது வேதனை அளிக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: நீட் தேர்வு தர வரிசை பட்டியலில் தமிழர் ஒருவர் கூட இடம்பெறாதது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்று வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேசிய தகுதிகாண் தேர்வு எனப்படும் நீட் தேர்வை இந்த ஆண்டில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதனால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக சென்றுள்ளது.
இந்தக் குழப்பத்துக்கு மத்தியில், இந்த தேர்வானது கடந்த மாதம் 7-ஆம் தேதி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினர். இதன் முடிவு நேற்று வெளியானது. இதுகுறித்து வைகோ அறிககை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

ஒருவர் கூட இல்லையே
மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய 83,359 மாணவர்களில் வெறும் 38.83 விழுக்காடு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சி தருகிறது. நீட் தேர்வு தர வரிசையில் முதல் 25 பேரில் ஒரு மாணவர்கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

தமிழக மாணவர்களுக்குப் பாதிப்பு
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ‘நீட்' தேர்வு நடத்தப்பட்டதால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு கடினமாக இருந்தது. கடந்த கல்வி ஆண்டில், பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய 11 லட்சம் பேரில், 88 ஆயிரத்த்து 881 பேர் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் தேர்வு எழுதிய 83,359 பேரில் வெறும் 32,368 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

தொடர்பு இல்லாத கேள்வித்தாள்
மத்தியப் பாடத்திட்டத்தின் கீழ் தொடர்பு இல்லாத கேள்வித்தாளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள முடியாமல் திணறிவிட்டனர். பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட நீட் தேர்வில் 110 மதிப்பெண்களைத் தொட முடியவில்லை. தமிழக மாணவர்களின் மருத்துக் கல்வி கனவுகளை நீட் தேர்வு முடிவுகள் தகர்த்துவிட்டன.
மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டது.

85% ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது
தற்போது தமிழக அரசு, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசாணை வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். மருத்துவ மாணவர்கள் சேர்க்கையால் மேலும் சட்டச் சிக்கல் எழாமல், தமிழ்நாட்டில் கிராமப்புற ஏழை, பிற்படுத்தப்பட்ட, தலித் மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு தமிழக அரசு விழிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற தமிழக அரசு உடனடியாக முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications