எல்லாம் சரி... எங்களுக்கு என்ன கிடைக்கும்? 'நீட்' பயிற்சி மையத்து முன்வைத்து அரங்கேறிய கூத்து
நீட் பயிற்சிக்காக மாணவர்கள் நலன் கருதி சிறப்பு கையேடு ஒன்றை தயாரித்த கல்வியாளர் ஒருவருக்கு கல்வி அமைச்சகத்தில் படு மோசமான அனுபவம் கிடைத்திருக்கிறது.
Recommended Video

சென்னை: நீட் பயிற்சிக்காக மாணவர்கள் நலன் கருதி சிறப்பு கையேடு ஒன்றை தயாரித்த கல்வியாளர் ஒருவருக்கு கல்வி அமைச்சகத்தில் படு மோசமான அனுபவம் கிடைத்திருக்கிறது.
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற கருத்தால், தமிழக மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சம் இன்னும் நீங்கவில்லை. ' மாநிலம் முழுவதும் நீட் பயிற்சிக்கான மையங்களை அரசு திறந்தாலும், அதற்குள் நடைபெறும் ஊழல்களைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை' என ஆதங்கப்படுகின்றனர் கல்வியாளர்கள்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வந்தாலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு காட்டும் உறுதியால் நொந்து போய் உள்ளனர் கிராமப்புற மாணவர்கள். அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்குப் பிறகு, நீட் தேர்வில் கூடுதல் அக்கறை செலுத்தத் தொடங்கியது தமிழக அரசு.

நீட் பயிற்சி மையங்கள்
இதற்காக, ' மாநிலம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கப்படும்' என அறிவித்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ள பள்ளிகளில் நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

பயிற்சி மையங்கள் திறப்பு
தற்போது வரையில் 100 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ' வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மீதமுள்ள 312 மையங்களும் செயல்படும்' எனப் பேட்டியளித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.

கல்வியாளரின் சிறப்பு கையேடு
இந்நிலையில், நீட் பயிற்சிக்கான சிறப்புக் கையேடு ஒன்றைத் தயாரித்த கல்வியாளர் ஒருவர், அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கச் சென்றார். அப்போது அமைச்சரின் உதவியாளர்கள் சிலர், ' நீங்கள் கூறும் பாடத்திட்டத்தின் மூலம் தேர்ச்சியை எப்படி அதிகரிக்க முடியும்?' என வினவியுள்ளனர்.

விளக்கிய கல்வியாளர்
இதற்குப் பதில் அளித்த பிரபலமான அந்தக் கல்வியாளர், ' மத்திய அரசுப் பாடத்திட்டத்தின்படி இதனைத் தயாரித்துள்ளோம். நீட் தேர்வில் எந்த மாதிரியான வினாக்கள் இடம்பெறும்? எவ்வளவு நாட்கள் பயிற்சி அளிக்க வேண்டும்? மாதிரி வினா விடைகள், தரமான வினாத் தொகுப்புகள், சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றின் மூலம் சி.பி.எஸ்.சி பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கே நாம் சவால்விடலாம். அதற்கேற்ப, இந்தக் கையேட்டினை தயாரித்துள்ளோம். மிகக் குறைவான செலவில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகப்படியான அளவில் தேர்வாகும்போது, அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்' என ஆர்வத்தோடு விளக்கியிருக்கிறார்.

எங்களுக்கு எவ்வளவு வரும்?
இதனைக் கேட்ட அமைச்சரின் உதவியாளர் ஒருவர், ' நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். 412 மையங்களுக்கும் எவ்வளவு பணம் தேவைப்படும் என விலைப்பட்டியல் கொடுங்கள். பயிற்சி புத்தகங்களையும் நீங்களே தயார் செய்யுங்கள். செலவீனத்தைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். எங்களுக்கு எவ்வளவு கொடுப்பீர்கள்? அதை மட்டும் முன்னரே சொல்லிவிடுங்கள்' எனக் கறாராகக் கூறிவிட்டார். இதற்குப் பதில் அளித்த கல்வியாளர், ' நல்ல நோக்கத்தோடுதான் என்னுடைய நேரத்தை செலவு செய்து கையேடு தயாரித்தேன். தனியார் பள்ளிகளைப் போல நீங்களும் வியாபாரம் பேசுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நன்றி' எனக் கூறிவிட்டு வெளியே வந்துவிட்டாராம். இதுகுறித்து அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல முயற்சித்தார் அந்தக் கல்வியாளர். இதற்குப் பதில் அளித்த கல்வி அதிகாரி ஒருவர், ' நீங்கள் அங்கு சென்று முறையிடுவதில் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை என ஆதங்கத்தோடு கூறியிருக்கிறார். இதைக் கேட்டு கல்வியாளரும் நொந்து போய் வெளியேறிருக்கிறார்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications